“நானே வருவேன் “ கதையை நான் எழுதவில்லை… ரகசியத்தை சொன்ன செல்வராகவன் !
சென்னை : இயக்குநர் செல்வராகவன் நானே வருவேன் கதையை நான் எழுதவில்லை என்று ரகசியத்தை கூறியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தனுஷ் ,செல்வராகவன் கூட்டணி.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என ஹிட் கொடுத்தவர்கள் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி. துள்ளுவதோ இளமை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாக தனுஷ். தற்போது ,கோலிவுட், ஹாலிவுட், டோலிவுட்,பாலிவுட் என பான் இந்திய ஹீரோவாக மாறிவிட்டார்.

11 ஆண்டுகளுக்கு பிறகு
11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் அண்ணனுடன் கைகோர்த்துள்ளார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் தயாராகி வருகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சாணிக்காகிதம் ரிலீஸ்
இயக்குநராக இருந்த செல்வராகவன், பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக மாறி உள்ளார். மேலும் அருண் மகாதேவன் இயக்கத்தில் சாணிக்காகிதம் படத்திலும் கீர்த்தி சுரேஷூடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் அமேசான் பிரைமில் நாளை வெளியாக உள்ளது.

புதுப்பேட்டை 2
இந்நிலையில்,யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள செல்வராகவன், நானும் தனுஷூம் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . இதனால், புதுப்பேட்டை 2 படத்தை இயக்குவது குறித்து பேசினோம். இந்த படம் குறித்தே சிந்தித்துக்கொண்டு இருந்தேன்.

தனுஷின் கதை
திடீரென ஒரு நாள் தனுஷ் ஒரு கதையுடன் வந்தார், அவர் கூறிய கதை என்னை கவர்ந்தது, சவால் மிகுந்த கதையாவும் இருந்தது. இதனால், இந்த படத்தையே இயக்கலாம் என்று முடிவு எடுத்தோம், நானே வருவேன் கதை தனுஷின் கதை என்றும், திரைக்கதையை நான் இயக்கியுள்ளேன் என செல்வராகவன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











