பிறந்தநாள் கொண்டாடல...ரசிகர்களிடம் சோகமாக சொன்ன ஸ்ரீதிவ்யா
சென்னை : தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு ஹீரோயின் ஆனவர்.
தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல டிவி சீரியல்களிலும் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். தமிழில் ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, இஞ்சி இடுப்பழகி, பெங்களூரு நாட்கள், ரெமோ, பென்சில், மருது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பட வாய்ப்பு இல்லை
தற்போது பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாததால், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது சிம்பிள் லுக் ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அதிலும் மேக்அப் இல்லாத ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறார்.

பிறந்தநாள் ஃபோட்டோ கேட்ட ரசிகர்கள்
இந்நிலையில் ஏப்ரல் 1 ம் தேதி ஸ்ரீ திவ்யாவின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு புடவையில் ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்களை அவர் பதிவிட்டிருந்தார். இதில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்ட பலர், பிறந்தநாள் கொண்டாடிய ஃபோட்டோக்கள் எங்கே என கேட்டுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடல
இதனால் மேக்அப் இல்லாத மிக சாதாரணமாக, சோகமாக இருப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றை வெளியிட்ட ஸ்ரீதிவ்யா அத்துடன், பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோக்கள் கேட்டவர்களுக்காக இந்த பதிவு. எனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. கேக் இல்லை. கொண்டாட்டமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் பதிவு
ஸ்ரீதிவ்யாவின் இந்த பதிவையும் 2.86 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். பலர் தலைவி, ஏஞ்சல் என ஸ்ரீதிவ்யாவை புகழ்ந்து கருத்து பதிவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தான் சிம்பிளாக இருக்கும் சில ஃபோட்டோக்களையும் ஸ்ரீதிவ்யா பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











