கள்ளத்தொடர்பா, விளக்கம் அளிக்கவே அசிங்கமா இருக்கு: டிவி நடிகை

By Siva

மும்பை: தனக்கும், நடிகர் அர்ஹான் பெஹலுக்கும் கள்ளத்தொடர்பு என்று நடிகர் மோஹித் அப்ரால் தெரிவித்தது குறித்து நடிகை மான்சி விளக்கம் அளித்துள்ளார்.

தொலைக்காட்சி நடிகர் மோஹித் அப்ராலுக்கும், நடிகை மான்சி ஸ்ரீவஸ்தவாவுக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக காதலித்த அவர்கள் திருமணம் நிச்சயமான கையோடு பிரிந்துவிட்டனர்.

I didnt cheat: Mansi

இந்நிலையில் மான்சிக்கும், நடிகர் அர்ஹான் பெஹலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் தான் தங்களின் திருமணம் நின்றது என்று மோஹித் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து பின்னர் அந்த போஸ்ட்டை நீக்கினார். பின்னர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மான்சி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

காதல் முறிவுக்கு பிறகு அடுத்த கட்டத்திற்கு சென்றால் அது மோசம் செய்வது என்று மோஹித்தின் அகராதியில் அர்த்தம் என்றால் நான் படிக்காதவள். ஒருவர் காதலை முறித்தால் அதற்காக அவர் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்று இல்லை. காரணம் இல்லாமல் யாரும் உறவை முறிக்க மாட்டார்கள்.

உங்களையும், உங்களின் குடும்பத்தையும் மதிப்பவராக, உண்மையுள்ளவராக பார்த்து காதலியுங்கள் என்று நான் அனைவருக்கும் அறிவுரை வழங்குகிறேன். மோஹித் உண்மையுடன் நடந்து கொள்ளாதது பற்றியோ அவரின் கோபம் பற்றியோ நான் பேச விரும்பவில்லை. அவர் இஷ்டப்படி என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.

தான் பாதிக்கப்பட்டவர் போன்று நடித்து சிம்பதி கிரியேட் பண்ண பாக்கிறார். ஆனால் நான் சுயமரியாதையுடன் வாழ விரும்புகிறேன். நான் செய்ததை நியாயப்படுத்தி இது போன்று பேச வேண்டிய நிலை வந்துவிட்டதே என்று நினைத்தால் வேதனையாக உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X