ரவி மோகன் குடும்பத்தை நான் கெடுத்தேனா.. உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா.. கெனிஷா கண்ணீர் வீடியோ

சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது தோழி பாடகி கெனிஷா குறித்த சர்ச்சையான பதிவுகளும் பேச்சுக்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அடிக்கடி அடிபட்டு வருகிறது. ரவி மோகன் விவாகரத்துக்கு காரணமே கெனிஷா தான் என்று இணையவாசிகள் பலரும் பலவிதமாக பேசினர். இதற்கெல்லாம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி நிறுத்தி வைத்தாலும், இணையவாசிகள் அமைதியாக இருப்பதில்லை. கெனிஷா குறித்து மிகவும் மோசமாகவும் கீழ் தரமாகவும் விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கெனிஷா, என்னை விமர்சிப்பதற்கு முன்னர் என்னை யார் என்று தெரிந்து கொண்டு அதன் பின்னர் விமர்சியுங்கள் என்று அவர் வெளியிட்டுள்ள நீண்ட நெடிய வீடியோ குறித்த பேச்சு தான் இணையத்தில் பரவலாக இருக்கிறது.

அவர் அந்த வீடியோவில், " எனது பெயர் கெனிஷா, நான் எனது அம்மாவை கடந்த 2013ஆம் ஆண்டு இழந்தேன், அப்பாவும் 2017ஆம் ஆண்டு இறந்துவிட்டார். நான் நான்காவது படிக்கும் போதே, எனது உறவுக்காரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன். சுமார் 18, 19 வயது இருக்கும்போது எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு விவரமே தெரியாது.

Kenishaa shared an emotional video denying allegations about Ravi Mohan s family breakup and opened up about her painful past

திருமணத்திற்கு பின்னர் எனது வயிற்றில் நான்கு மாத குழந்தை இருந்தது. ஒரு நாள் என்னை திருமணம் செய்து கொண்டவர் அவரது நண்பர்கள் மற்றும் அவருக்கு வேண்டியவர்கள் முன்பு அவரது பேச்சை நான் மதிக்கவில்லை என்ற காரணத்தால், என்னை பலமாக தாக்கினார். இதனால் எனது வயிற்றில் இருந்த சிசு இறந்து விட்டது. அம்மா, அப்பா, எனது குழந்தை என இப்படி எல்லாவற்றையும் இழந்த நான் தான் ரவி மோகனின் குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்று நினைப்பேனா?

குடும்பத்தை பிரித்தேனா?: எனது குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து நான் வெளிவர எவ்வளவு போராடினேன் என்று எனக்குத்தான் தெரியும். அப்படி இருக்கும்போது ரவி மோகன் அவரது குடும்பத்தை பிரிந்து, குழந்தைகளைப் பிரிந்து வரவேண்டும் என்றோ, அவர்களைப் பிரிக்க வேண்டும் என்றோ நான் நினைப்பேனா?

Kenishaa shared an emotional video denying allegations about Ravi Mohan s family breakup and opened up about her painful past

ரவி மோகன்: ரவி மோகன் ஒன்றும் குழந்தை இல்லை, அவரது வாழ்க்கையில் அவர் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பது அவர்தான். அவர் யாருடன் பேச வேண்டும், யாருடன் பழக வேண்டும் என்று முடிவு எடுப்பதும் அவர்தான். அப்படி இருக்கும்போது என்னை எதற்காக இழுக்கிறீர்கள். நான் யார் என்றே தெரியாமல் என்னைப் பற்றி பல அவதூறு கருத்துக்களை பேசி, மக்கள் மத்தியில் தவறான தகவலைப் பரப்பி பணம் சம்பாதிக்கிறீர்கள்.

வேற எதுவும் கிடைக்கலயா?: கேமரா முன்னால் பேச உங்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லையா? உலகத்தில் போர் நடைபெற்றுக் கொண்டுள்ளது. மக்கள் வரும் காலங்களில் கேஸ் சிலிண்டருக்காக கஷ்டபடவுள்ளனர். மக்கள் பலரும் சாப்பாட்டிற்காக சிரமப்படுகிறார்கள், அவர்களுக்காக நீங்கள் குரல் கொடுங்கள்" என்று பேசி உள்ளார். இவரது இந்த வீடியோ குறித்த பேச்சுக்கள் இணையத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X