எனக்கு புடிச்ச மாதிரி இன்னும் படம் எடுக்கல.. இயக்குனர் வெற்றிமாறன்!
சென்னை : இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது
Recommended Video
அந்த வகையில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு பட்டையைக் கிளப்பியது
இப்பொழுது விடுதலை மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் இன்னும் எனக்கு பிடித்த மாதிரி படங்களை எடுக்கவில்லை என தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்

வடசென்னை பாகம் 2 ல் தனுஷ்
இயக்குனர் பாலுமகேந்திராவிடம் வித்தையை கற்ற இயக்குனர் வெற்றிமாறன் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். பொல்லாதவன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறனுக்கு முதல் படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. பொல்லாதவன் மூலம் தனுஷ் உடன் கூட்டணி அமைத்த வெற்றிமாறன் அதைத் தொடர்ந்து ஆடுகளம்,வடசென்னை, அசுரன் என தொடர்ந்து படங்களில் பணியாற்றி வருகிறார். அடுத்ததாக வடசென்னை பாகம் 2 ல் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி உள்ளது

ஹீரோவாக அறிமுகம்
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை வெளியான 4 படங்களில் ஆடுகளம் மற்றும் அசுரன் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுவரை காமெடியனாக அனைவராலும் பார்க்கப்பட்டு வந்த நடிகர் சூரியை கதாநாயகனாக விடுதலை என்ற படத்தில் அறிமுகம் செய்கிறார் . முற்றிலும் வித்தியாசமான கதை களத்தில் முழுக்க முழுக்க சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட வந்த விடுதலை படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து இப்பொழுது தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டுள்ளது மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நடிகை பவானிஸ்ரீ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரிசையாக ஹிட் படங்கள்
நடிகர் சூர்யா தனது ஒவ்வொரு படங்களிலும் சமூகத்திற்குத் தேவையான முக்கிய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார்.

எனக்கு பிடிச்ச மாதிரி படம் எடுக்கல
கிராமத்து பின்னணியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் மற்றும் அஜித்துடன் அடுத்தடுத்த படங்களில் வெற்றிமாறன் இணைய உள்ள நிலையில், தொடர்ந்து தரமான படங்களை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் கொடுத்துவரும் வெற்றிமாறன் இன்னும் எனக்கு பிடிச்ச மாதிரி படம் எடுக்கல என தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











