விஜய் இப்படி செஸ் விளையாடுவார்னு தெரியல.. சூப்பர்.. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஓபன்

சென்னை: நடிகராக இருந்த விஜய்; பெரிய பிரளயத்தையே உருவாக்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார். திரைத்துறையை சேர்ந்தவர்கள்; எங்கள் வீட்டிலிருந்து ஒருவர் சி.எம் ஆகியிருக்கிறார் என்று கொண்டாடுகிறார்கள். அவரது ரசிகர்களும் அப்படித்தான். இந்நிலையில் நார்வே செஸ் தொடரை வென்ற பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டினார் விஜய். இந்நிலையில் அவருடன் செஸ் விளையாடியது குறித்து பிரக்ஞானந்தா ஓபனாக பேசியிருக்கிறார்.

சினிமாவில் விஜய் அறிமுகமானபோது அவரது உருவத்தை வைத்து பலரும் எடை போட்டார்கள். மேலும், ஐந்து வருடங்கள்கூட அவரால் தாக்குப்பிடிக்க முடியாது என்றுதான் அடித்து சொன்னார்கள். அவர் அத்தனையையும் கேட்டுக்கொண்டு அமைதியாக உழைத்தார். அதன் பலனாக வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. ஒருகட்டத்தில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கைகள் வலுக்க; சில வருடங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார்.

I Didn t Expect Him to Play So Well Praggnanandhaa on Chess Game With Vijay
Photo Credit:

முதல் தேர்தலிலேயே வெற்றி: கட்சி தொடங்கியதை பார்த்து பலரும் சிரிக்கக்கூட செய்தார்கள். இவரால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது எனவும் கூறினார்கள். ஆனால் அவரோ அசால்ட்டாக இரண்டு தொகுதிகளிலும் வென்றார். அவரது கட்சியும் மொத்தம் 106 தொகுதிகளில் வென்று; 108 தொகுதிகளுடன் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது.கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து முதலமைச்சராகி; கூட்டணி கட்சியினருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார்.

Also Read
விஜய்யால் வடிவேலு காணாமல் போய்டுவாரு.. எஸ்.ஏ.சி இப்படி சொல்லிருக்காரே.. என்னனு நீங்களே பாருங்க
விஜய்யால் வடிவேலு காணாமல் போய்டுவாரு.. எஸ்.ஏ.சி இப்படி சொல்லிருக்காரே.. என்னனு நீங்களே பாருங்க

பிரக்ஞானாந்தாவுடன் சந்திப்பு: சி.எம்மாக மும்முரத்டோடு பணியாற்றினாலும்; அவர் ஏற்கனவே இருக்கும் திட்டங்களைத்தான் பட்டி டிங்கரிங் பார்த்து ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கிறார் என விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க நார்வே செஸ் தொடரில் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை இன்று தலைமை செயலகத்துக்கு வரவழைத்து பாராட்டி; 50 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கினார். அப்போது பிரக்ஞானந்தாவின் தாய், தந்தை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இருந்தார்கள்.

செஸ் விளையாடிய சி.எம்: இந்த சந்திப்பின்போது விஜய்யும், பிரக்ஞானந்தாவும் செஸ்ஸும் விளையாடினார்கள். கிராண்ட் மாஸ்டருடன் விளையாடுகிறோம் என்ற எந்தப் பதற்றமும் முதலமைச்சரிடம் இல்லை. சில நல்ல மூவ்களையும் செய்தார். ஆனால் பிரக்ஞானந்தாவோ சில மூவ்களில் சி.எம் விஜய்யை காலி செய்துவிட்டார். இருப்பினும் அந்த தருணத்தை விஜய் ரொம்பவே என்ஜாய் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியந்த பிரக்ஞானந்தா: இந்த சந்திப்பை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, "முதலமைச்சர் விஜய் என்னுடன் செஸ் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களேதான் செஸ் போர்டு எடுத்து வர சொல்லி கூறினார்கள். அவருடைய டேபிளில் உடனே செட் செய்து விளையாட தொடங்கிவிட்டோம். அவர் நன்றாகவே விளையாடினார். நீங்கள் எப்போது விளையாடுவீர்கள் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், எனது நண்பர்களுடன் விளையாடுவேன் என கூறினார்.

நான் வெற்றி: முதலமைச்சருடனான செஸ் விளையாட்டில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால் அவர் நன்றாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் விளையாடுவார் என்று தெரியாது" என்றார். முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு நடந்த நார்வே செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமரை வீழ்த்தியிருந்தார் அவர்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X