சிவகார்த்திகேயன் அப்படி நடந்துப்பாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல!
சென்னை : தனது ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்
டாக்டர் வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது டான் படத்தில் கல்லூரி மாணவனாக இளமை துள்ளலுடன் நடித்து வருகிறார்
இந்த நிலையில் சார்பட்டா பரம்பரையில் மெஸ்ஸியம்மாவாக கலக்கிய பிரியதர்ஷினி ராஜ்குமார் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் அப்படி நடந்துப்பாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல எனப் பகிர்ந்துள்ளார்.

அமைதியான டாக்டர்
நடிகர் சிவகார்த்திகேயன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் கதைகளில் நடிப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார். அந்த வகையில் டாக்டர் படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுவரை கலகலப்பான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் அப்படியே நேரெதிராக மிகவும் அமைதியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இருப்பினும் டாக்டர் படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது

தெலுங்கில் நேரடிப் படம்
அடுத்ததாக சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் . முற்றிலும் கல்லூரி கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்ததாக ஜாதி ரத்னாலு பட இயக்குனர் அனுராக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தெலுங்கில் நேரடிப் படம் ஒன்றில் நடித்து வருகிறார் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. பிரபல உக்ரைன் நடிகை இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நர்ஸ் கெட்டப்பில்
இவ்வாறு தனது ஒவ்வொரு படங்களுக்கும் புதிய பரிமாணங்களை எடுத்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது ரெமோ. இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் நடித்து கலக்கி இருப்பார். காதல்,காமெடி,ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதை களத்தில் வெளியான ரெமோ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

அப்படி நடந்துப்பாருன்னு நினைச்சு கூட பாக்கல
சார்பட்டா பரம்பரையில் டாடியின் மனைவி மெஸ்ஸியம்மாவாக நடித்த நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்திருப்பார். ரெமோவிலும் இவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அப்போது தான் நடிக்கத் தொடங்கி சில படங்களில் நடித்து வந்த சூழ்நிலையில் ரெமோ படப்பிடிப்பு தளத்தில் என்னை சிவகார்த்திகேயன் எப்போது பார்த்தாலும் சிரித்தபடியே "ஹாய் மேம்.. ஹவ் ஆர் யூ" என விசாரிப்பார். சிவகார்த்திகேயன் அப்படி நடந்துப்பாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல. என ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த அனுபவத்தை நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











