twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிஜமாகவே இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்கலை... நல்ல ரெஸ்பான்ஸ்... ஓ மை கடவுளே டைரக்டர் ஹேப்பி

    By
    |

    சென்னை: நிஜமாகவே இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என்று ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

    அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம், ஓ மை கடவுளே. வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷா ரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

    அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தை அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு, ஹேப்பி ஹை பிச்கர்ஸ் அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

    ஓ மை கடவுளே படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்ளோ தெரியுமா? ஆரம்பமே அசத்தல்தான்! ஓ மை கடவுளே படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்ளோ தெரியுமா? ஆரம்பமே அசத்தல்தான்!

    ரமேஷ் திலக்

    ரமேஷ் திலக்

    இந்த படம் நேற்று ரிலீஸ் ஆனது. சக்தி பிலிம் பேக்டரி படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது. விது அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். லியான் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி கடவுளாக நடித்துள்ளார். அவர் உதவியாளராக ரமேஷ் திலக் நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

    வாணி போஜன்

    வாணி போஜன்

    இதில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் வாணி போஜன். அவர் கூறும்போது, '
    இது என் இதயத்துக்கு நெருக்கமான படம். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு கவனமாக, தேர்ந்தெடுத்த கேரக்டர்களில் மட்டுமே நடித்துவருகிறேன். தமிழில் அற்புதமான வாய்ப்பாக, இந்தப் படம் அமைந்திருக்கிறது. அஷ்வத் சிறப்பாக இயக்கி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

    எதிர்பார்த்தீர்களா?

    எதிர்பார்த்தீர்களா?

    இந்நிலையில் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரவேற்பை எதிர்பார்த்தீர்களா? என்று இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவிடம் கேட்டபோது, 'இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தெரியும். ஏனென்றால் இதன் ஸ்கிரிப்டை 5 வருடமாக செதுக்கி செதுக்கி உருவாக்கினேன். ஒவ்வொரு கேரக்டருக்குமான முக்கியத்துவம், அதை எப்படி இன்னும் சுவராஸ்யமாக்குவது என்று தொடர்ந்து ஸ்கிரிட்டை ஷார்பாக அமைத்தேன்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    இப்போது படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியொரு வரவேற்பை பெறும் என்று நான் நினைக்கவில்லை. வெளியூர் தியேட்டர்களுக்கும் விசிட் அடித்தோம். அங்கும் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து பார்க்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல கதைக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதற்கு இந்தப் படமும் சாட்சி என்றார்.

    English summary
    Oh My Kadavule' director ashwath marimuthu said,'I didn't expect this kind of response'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X