இது நடக்கும்னு எதிர்பார்க்கலை... ஆனா, நான் விதியை நம்பறேன்...' துப்பறிவாளன் 2' பற்றி நடிகர் விஷால்

By

சென்னை: 'துப்பறிவாளன் 2' படத்தை தான் இயக்கப் போவதாக வந்த தகவலை நடிகர் விஷால் உறுதிப்படுத்தி உள்ளார்.

விஷால் ஹீரோவாக நடித்தப் படம் துப்பறிவாளன். இதை மிஷ்கின் இயக்கி இருந்தார். இந்த படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.

பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்திருந்தனர். அரோல் கரோலி இசை அமைத்திருந்தார். விஷால், கனியன் பூங்குன்றன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

இளையராஜா இசை

இளையராஜா இசை

தனது விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்திருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி மிஷ்கின், விஷால், பிரசன்னா இணைந்தனர். ஹீரோயினாக ஆஷ்யா நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

மிஷ்கினுடன் பிரச்னை

மிஷ்கினுடன் பிரச்னை

இதில் ரகுமான், கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டது. படத்தில் நடித்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்பட்டது.

விலகினார் மிஷ்கின்

விலகினார் மிஷ்கின்

அங்கு ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் படக்குழு சென்னைத் திரும்பியது. இதன் அடுத்த ஷெட்யூலுக்கு ரெடியான நிலையில் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் மிண்டும் பிரச்னை ஏற்பட்டது. மிஷ்கின் பட்ஜெட்டை அதிகமாகக் கேட்டாராம். இதனால் ஏற்பட்ட பிரச்னையால் படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். இதையடுத்து விஷாலே படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது.

விதியை நம்புவன்

விதியை நம்புவன்

இந்நிலையில், துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்க இருப்பதாக நடிகர் விஷால் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, 'அடுத்த வருடம் படம் இயக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். அது விலங்குகள் பற்றிய படம். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் விதியை நம்புவன். அதனால் அதன்படியே செல்கிறேன். இந்த படத்தை இயக்க இருப்பதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன்.

ஆவலாக எதிர்பார்க்கிறேன்

ஆவலாக எதிர்பார்க்கிறேன்

இயக்குனர் என்பவர், கேப்டன் ஆப் தி ஷிப் போல. அதிக பொறுப்புகள் இருக்கிறது. எடிட்டிங், ரெக்கார்டிங் உட்பட பல அவதாரங்களை எடுக்க வேண்டி இருக்கிறது. அதனால் அதை ஆவலாக எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் இப்போது அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கும் சக்ரா படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X