விஜய் எனக்கு மட்டும் ஏன் பிகில் மோதிரம் கொடுக்கலை - தேவதர்ஷினி
Recommended Video
சென்னை: பிகில் படத்தில் நடித்த படக்குழுவினர் அனைவருக்கும் பிகில் மோதிரம் பரிசளித்த நடிகர் விஜய் தனக்கு கொடுக்கவில்லை என்று நடிகை தேவதர்ஷினி வருத்தப்பட்டுள்ளார்.
இளைய தளபதி விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா,அயல் நாடுகள் முழுக்க பரவி ரசிக பட்டாளம் ஏராளம். அவர்கள் விஜய்க்கு செய்யும் அர்ப்பணிப்போ தாராளம்.

நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமா நடிகர்களே ரசிகர்களாகவும் உள்ளனர். அவர்கள் விஜய் கேரக்டர் பற்றி பேட்டிகளில் பேசி கேட்டிருப்போம். பல நடிகர்கள் விஜய்யை பாராட்டி பேசி கொண்டாடியது உண்டு.
எப்போதும் அமைதியாக இருப்பார், அதிகம் பேசமாட்டார், கேமரா முன்பு தீயாக நடிப்பார். தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்துக் கொடுத்துவிட்டு அமைதியாக தனிமையில் உட்கார்ந்துவிடுவார் என்று பலரும் கூறியுள்ளனர். இது எல்லோரும் சொல்லும் ஒரு விசயம் தான்.
அதேபோலத்தான் தான் நடிக்கும் படத்தில் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் அனைவருக்கும் ஏதாவது பரிசளிப்பது வழக்கம். அது மாதிரியே பிகில் படத்தில் தன்னுடைய காட்சிகள் அனைத்தும் முடிந்த உடனே, அந்தப் படத்தில் பணியாற்றிய நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என சுமார் 400 பேர்களுக்கு பிகில் எழுத்து பொறித்த தங்க மோதிரத்தை பரிசளித்துள்ளார்.

இந்நிலையில் பிகில் படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்துள்ள நடிகை தேவதர்ஷினி அளித்துள்ள பேட்டியில், விஜய் ஒரு விஷயத்தை மாற்றியே ஆகவேண்டும் என பேசியுள்ளார். அது மட்டும் நடந்தால் ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகி விடுவார்கள்.
அவர் பேசும்போது மற்றவர்களுக்கு கேட்கும் அளவுக்கு சத்தமாக பேசினால் நன்றாக இருக்கும். அவர் பேசினால், என்ன சார் என்று நாம் தான் அவர் அருகில் காதை கொண்டு செல்லவேண்டி உள்ளது, என கூறியுள்ளார் தேவதர்ஷினி.

மேலும் விஜய் பிகில் படக்குழுவுக்கு கிப்ட்டாக கொடுத்த தங்க மோதிரம் தனக்கு கிடைக்கவில்லை என கூறி வருத்தப்பட்டுள்ளார் அவர். கிப்ட் வாங்குவது என்று முடிவு எடுத்து விட்டால், யார் பேச்சையும் கேட்க மாட்டேன், எப்படியாவது போராடி வாங்கி விட வேண்டியது தான். ஏனென்றால் யாரிடம் இருந்து வாங்குகிறோம் என்பது முக்கியம், அதனால் உரிமையோடு சண்டை போடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











