யுவன் மியூசிக் எனக்கு சுத்தமாக பிடிக்காது... ஓப்பனாக பேசிய மிஷ்கின்!
சென்னை: இயக்குனர் மிஷ்கின் தனக்கென தனி ஸ்டைலை வைத்துக்கொண்டு வித்தியாசமான படங்களை இயக்குபவர்
பிசாசு வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக பிசாசு பாகம் 2 இயக்கி வருகிறார்
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பிடிக்காது என மிக ஓபனாக பேசியுள்ளார்

தனி ஸ்டைலில்
சித்திரம் பேசுதடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின் முதல் படத்திலேயே வித்தியாசமான படத்தை கொடுத்த இவரை ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கினர் அதைத் தொடர்ந்து அஞ்சாதே என்ற வெற்றி படத்தை கொடுத்தார் .
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கமர்சியல் இயக்குனர்களே உள்ள நிலையில் கமர்சியல் படங்களை இயக்காமல் தனக்கென தனி ஸ்டைலை வைத்துக் கொண்டு ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைகளை கையாண்டு வரும் இயக்குனர் மிஷ்கின் திரைப்படங்கள் என்றாலே கைகளுக்கும் கால்களுக்கும் மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இவரின் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் முந்தைய படங்களுக்கு இவர்களது படங்களில் நடிக்கும் நடிப்பதற்கு மிக வித்தியாசமான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்கள்.

பேயை தேவதையாக
தமிழ் சினிமாவில் இதுவரை பல விதமான பேய் படங்கள் வெளியாகி இருந்தாலும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசுக்கு தனி இடமே உண்டு. பேய்கள் கொடூரமானது போல காலங்காலமாக காட்டிக் கொண்டு வந்த நிலையில் பிசாசு படத்தில் பேயை தேவதையாக மிஸ்கின் காட்டியிருந்தது ரசிகர்களை பிரமிக்க வைத்ததோடு ரசிகர்களும் தூக்கி வைத்து கொண்டாடி வெற்றி படமாக்கினர்.

ஆண்ட்ரியா லீட் ரோலில்
இந்த நிலையில் பிசாசு வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் பிசாசு பாகம் இரண்டை தற்போது இயக்கி வருகிறார் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா லீட் ரோலில் நடித்து உள்ளார். விஜய் சேதுபதி பூர்ணா சந்தோஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் பிசாசு 2 படப்பிடிப்பு முடிந்து தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது

யுவன் மியூசிக் எனக்கு சுத்தமாக பிடிக்காது
தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள யுவன் சங்கர்ராஜா பெரும்பாலான இயக்குனர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார் ஆனால் இன்றுவரை இயக்குனர் மிஷ்கின் உடன் மட்டும் இன்றுவரை இணைந்து பணியாற்றாமல் உள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின் யுவன் சங்கர் ராஜாவின் இசையின் மீது எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர், மிகத் திறமையானவர். மாடர்னான கம்போசர் கூட . ஆனால் என்னுடைய இசை பார்வை வேறு யுவன் சங்கர் ராஜாவின் இசை பார்வை வேறு எனவே எங்க இரண்டு பேருக்கும் செட்டாகாது எனக்கு இளையராஜாவும் கார்த்திக் ராஜாவும் போதும் யுவன் சங்கர் ராஜா எனக்கு செட்டாக மாட்டார் . என மிக வெளிப்படையாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











