முக்கோண காதல்: கவின், லாஸ்லியா பற்றி புதுக்கதை சொல்லும் சாக்ஷி

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Sakshi Eliminated: கவினை கையிலேயே பிடிக்க முடியாது- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் நடந்த முக்கோண காதல் பற்றி புதுக்கதை சொல்கிறார் சாக்ஷி அகர்வால்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது சாக்ஷி, கவின் இடையே காதல் ஏற்பட்டது. இதில் லாஸ்லியா வந்து சேர்ந்து முக்கோண காதல் கதையானது. இந்த வீணாப் போன முக்கோண காதல் கதையை வாரக்கணக்கில் காண்பித்து பார்வையாளர்களை கடுப்பேற்றினார் பிக் பாஸ்.

இந்நிலையில் தான் ஒரு வழியாக சாக்ஷியை வெளியேற்றி முக்கோண காதல் கதைக்கு முடிவு கட்டப்பட்டது.

சாக்ஷி

சாக்ஷி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பார்வையாளர்கள் சாக்ஷியை சிநேக்சி என்று அழைக்கத் துவங்கிவிட்டனர். சாக்ஷியை டிவியில் பார்த்தாலே கடுப்பாகி அவரை திட்டினார்கள். படங்களில் ஏதோ கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாக்ஷி பிக் பாஸ் வீட்டிற்கு சென்று பெயரை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம்.

லாஸ்லியா

லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சாக்ஷி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முக்கோண காதல் போன்று ஒன்று உருவானதை உணர்ந்ததாகவும், அதில் ஒரு ஆளாக இருக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். யாராவது என்னிடம் உண்மையாக இருந்தால், நானும் அவர்களிடம் உண்மையாக இருப்பேன். ஆனால் எனக்கு உன்னை பிடிக்கும் அதே சமயம் அவளையும் பிடிக்கும் என்று கூறுவது எல்லாம் எனக்கு புரியவில்லை. ஒருவரிடம் உண்மையாக இருப்பது தான் நல்ல ஆண்பிள்ளைக்கு அழகு என்கிறார் சாக்ஷி.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

முக்கோண காதல் தொடர்பாக கவின், லாஸ்லியாவிடம் பேசி பிரச்சனையை தீர்க்க நினைத்தேன். ஆனால் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நான் லாஸ்லியாவிடம் தனியாக பேச முயன்றேன் ஆனால் அவர் என்னை கண்டுகொள்ளாமல் போய்விட்டார் என்று சாக்ஷி தெரிவித்துள்ளார்.

கண்ணீர்

கண்ணீர்

பிக் பாஸ் வீட்டை விட்டு எப்பொழுது வெளியேறுவோம் என்று இருந்தேன். நான் வெளியேற்றப்படுவதாக அறிவித்தபோது நிம்மதியாக இருந்தது. அதனால் தான் நான் அழவில்லை. எவிக்ஷனுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே நான் வெளியே செல்ல மனதளவில் தயாராகிவிட்டேன். அதனால் கிளம்பும் நாள் அன்று எனக்கு அழுகை வரவில்லை என்று சாக்ஷி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X