Boney Kapoor on Sridevi: ஸ்ரீதேவியை நானா கொன்றேன்? வேதனைப்படுத்திய அந்த டெஸ்ட்.. போனி கபூர் பகீர்!

மும்பை: துபாயில் நடிகை ஸ்ரீதேவி ஹோட்டல் பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்தது ஏகப்பட்ட சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் கிளப்பிய நிலையில், சில ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் அது குறித்து வாய் திறந்து அளித்த விளக்கம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் கந்தன் கருணை படத்தில் குழந்தை முருகனாக நடித்து அறிமுகமான ஸ்ரீதேவி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சி தலைவர் எம்ஜிஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.

I didnt kill my wife; Boney Kapoor finally opens how he face lie detector test on Sridevi Death

மூன்று முடிச்சு, 16 வயதினிலே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்ற ஸ்ரீதேவி அதிரடியாக அப்பவே பான் இந்தியா நடிகையாக மாறினார்.

ஸ்ரீதேவி மரணம்: சினிமாவில் 50 ஆண்டுகள் நடித்து அசத்திய ஸ்ரீதேவி சுமார் 271 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் விஜய்யின் புலி படத்தில் நடித்த ஸ்ரீதேவி 2017ல் இந்தியில் வெளியான மாம் படத்தில் நடித்திருந்தார். 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்துடன் துபாய்க்கு சென்ற இடத்தில் இந்த கோர சம்பவம் நடைபெற்றது. 54 வயதிலேயே இந்திய சினிமா உலகின் மிகப்பெரிய நட்சத்திரம் மறைந்தது. மகாராஷ்ட்ரா அரசு சார்பில் அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மரணத்தில் மர்மம்?: நடிகை ஸ்ரீதேவி சும்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறக்கும் ஆளா என்கிற கேள்வி எழுந்த நிலையில், அவர் பெயரில் பல கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டு இப்படி ஒரு டிராமா போடுகின்றனர் என்று சர்ச்சை வெடித்தது.

மனம் திறந்த போனி கபூர்: சமீபத்தில் பேட்டியளித்த ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர், என்னுடைய அன்பு மனைவியை நானே கொன்று விட்டேன் என்றெல்லாம் வாய் கூசாமல் பலரும் பேசினர். ஆனால், அதுதொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என்றே இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்தேன். ஏனென்றால், இதே கேள்வியை துபாய் போலீஸார் சுமார் 48 மணி நேரம் என்னிடம் கேட்டு விசாரணை நடத்தினர் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

உண்மை கண்டறியும் சோதனை: அதுமட்டுமின்றி என்னிடம் உண்மை கண்டறியும் சோதனையையும் நடத்தினர். அப்போது என் மனம் பட்ட வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும். அதன் ரிசல்ட் வந்த பின்னர் தான், இது திட்டமிட்ட கொலை அல்ல என்றும் ஸ்ரீதேவியின் மரணம் ஒரு எதிர்பாராத விபத்து என்றும் முடிவு செய்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரவே அனுமதித்தனர் என மன வேதனையுடன் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவிக்கு அந்த பிரச்சனை இருந்தது: மேலும், ஸ்ரீதேவி அப்படி மயங்கி விழ காரணமே அவர் தனது உடம்பை எப்போதுமே ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மனநிலையில், பல வேளைகள் உணவு உண்ணாமல் தவிர்த்து விடுவார். லோ பிபி இருக்கு என்றும் உணவை தவிர்ப்பது சரியான டயட் கிடையாது என மருத்துவர்கள் சொன்ன ஆலோசனைகளையும் அவர் மதிக்கவில்லை. பல முறை வீட்டில் மயங்கி விழுந்துள்ளார் என்றும் பகீரை கிளப்பி உள்ளார் போனி கபூர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X