சுசிலீக்ஸ்: அந்த கசமுசா மேட்டர் பற்றி மனம் திறந்த நடிகர் ராணா
ஹைதராபாத்: சுசிலீக்ஸ் பற்றி தான் கண்டுகொள்ளவே இல்லை என நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.
பாடகி சுசித்ரா நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ் ஆட்களால் தாக்கப்பட்டதில் காயம் அடைந்ததாக ட்விட்டரில் தெரிவித்தார். அதன் பிறகு தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட பிரபலங்களின் கசமுசா புகைப்படங்களை சுசி வெளியிட்டார்.
தெலுங்கு நடிகர் ராணா, த்ரிஷாவின் கன்னத்தில் முத்தமிடும் புகைப்படத்தையும் சுசி வெளியிட்டார்.

ராணா
சுசி லீக்ஸ் பற்றி ராணாவிடம் கேட்டால் மனிதர் சிரித்துவிட்டு, அது எல்லாம் நான் ஒரு மேட்டராவே கண்டுகொள்ளவில்லை. நீங்க தான் பாஸ்(மீடியா) அந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கிவிட்டீர்கள் என்கிறார் ராணா.

பிரபலம்
பல புகைப்படங்கள் வெளியாகின. அதில் என் புகைப்படம் நியூஸ் ஆகியுள்ளது என்றால் நான் மற்றவர்களை விட பிரபலம் என்று தானே அர்த்தம் என்று கூறி சிரிக்கிறார் ராணா.

சிரிப்பு
நான் ஐஐஎப்ஏ உத்சவம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அப்போது இந்த சுசிலீக்ஸ் மேட்டரை பெரிய காமெடியாக்கி சிரித்தேன் என்று ராணா தெரிவித்துள்ளார்.

த்ரிஷா
ராணாவும், த்ரிஷாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்பட்டது. த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயமான பிறகே அந்த பேச்சு நின்றது. த்ரிஷாவின் திருமணம் நின்ற பிறகு அடங்கிய அந்த பேச்சு மீண்டும் கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications