யாரோ அதை பண்றாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. அஜித் பட இயக்குனர் அதிரடி எச்சரிக்கை!

By

சென்னை: தனது பெயரில் போலியாக யாரோ ஒருவர் அதை செய்து வருவதாக அஜித் பட இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அல்லரி நரேஷ் ஹீரோவாக நடித்த குறும்பு படம் மூலம் இயக்குனர் ஆனவர் விஷ்ணுவர்தன்.

தொடர்ந்து ஆர்யா, பிரகாஷ்ராஜ், நவ்தீப் நடித்த அறிந்தும் அறியாமலும் படத்தை இயக்கினார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

பில்லா, ஆரம்பம்

பில்லா, ஆரம்பம்

இதையடுத்து ஆர்யா, பரத் நடித்த 'பட்டியல்' படத்தை இயக்கினார். பின்னர் ஆர்யா நடித்த சர்வம், அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் உட்பட சில படங்களை இயக்கினார். கடைசியாக ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் உருவான 'யட்சன்' என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

கியாரா அத்வானி

கியாரா அத்வானி

இவர் பிரபல தயாரிப்பாளர் 'பட்டியல்' சேகரின் மகன். நடிகர் கிருஷ்ணாவின் சகோதரர். விஷ்ணுவர்தன் இப்போது, இந்தி படம் ஒன்றை இயக்கி வருகிறார். நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இதில் ஹீரோவாக நடிக்கிறார். பிரபல நடிகை கியாரா அத்வானி, ஜாவேத் ஜாஃப்ரி, ஷிவ் பண்டிட் உட்பட பலர் நடிக்கும் அந்த படத்துக்கு ஷேர்ஷா என்று டைட்டில் வைத்துள்ளனர்.

ராணுவ கேப்டன்

ராணுவ கேப்டன்

பரம்வீர் சக்ரா விருதுபெற்ற ராணுவ கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையை கொண்ட படமான இதை, கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ், சில நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா, ஹிமேஷ் ரேஷமைய்யா உட்பட 4 பேர் இசை அமைக்கின்றனர்.

லாக்டவுன்

லாக்டவுன்

வரும் ஜூலை மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்த இந்தப் படம், லாக்டவுன் காரணமாகத் தடைபட்டுள்ளது. இதற்கிடையே தனது பெயரில் போலியாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் உருவாகி இருப்பதாக இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தொடர வேண்டாம்

அதில், " எச்சரிக்கை. எனக்கு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இல்லை. என் பெயரில் இருப்பவை போலியானவை. நான் நடத்துவதைப் போலவே இதை யாரோ ஒருவர், தவறாக நடத்தி வருகிறார். யாரும் அதை பின் தொடர வேண்டாம். அவை போலியானது என புகார் செய்யுங்கள்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X