»   »  அந்த அளவுக்கு எனக்கு அறிவு இல்லை: பாகுபலி 2 விழாவில் தனுஷ் பேச்சு

அந்த அளவுக்கு எனக்கு அறிவு இல்லை: பாகுபலி 2 விழாவில் தனுஷ் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி படத்தை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யும் அளவுக்கு தனக்கு அறிவு இல்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2 பட இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. நிகழ்ச்சியில் ராஜமவுலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர்.

நடிகரும், இயக்குனருமான தனுஷ் இசையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

பாகுபலி

பாகுபலி

எல்லோருக்கும் வணக்கம். பாகுபலி என்கிற பிராண்ட் எந்த அளவுக்கு பெருசா வளர்ந்து நிற்கிறது என்பது நான் ஒன்றும் புதுசா சொல்லி உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை.

பாகுபலி 2

பாகுபலி 2

நான் பாம்பேயில் இருந்து தான் ஸ்ட்ரெய்ட்டா வருகிறேன். அங்க ஒரு படத்துல நான் கவுரவத் தோற்றம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அந்த யூனிட்ல கேட்கிறேன் இப்ப எந்த இந்தி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது என்று. பாகுபலி 2 அப்படினு சொல்றாங்க. அங்கேயும் அது தான் சொல்றாங்க.

கடின உழைப்பு

கடின உழைப்பு

அவங்களுக்கு அவங்களே ஒரு ஸ்டாண்டர்ட் செட் பண்ணியிருக்காங்க. இதற்கு பின்னால் எவ்வளவோ கடின உழைப்பு உள்ளது. ஒரு வருஷம் இரண்டு வருஷம் வேறு எதையும் செய்யாமல் இதையே செய்வது கடினம். ஒரு நேரத்தில் ச்சீ என்று கூட நினைக்கத் தோன்றும். அவர்கள் பொறுமையாக இருந்துள்ளார்கள்.

5 ஆண்டுகள்

5 ஆண்டுகள்

இந்த குழு கடந்த 5 வருஷமா இரண்டு பார்ட்டும் சேர்ந்து செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ராஜமவுலியின் டைரக்ஷன் பற்றி பேசும் அளவுக்கு எனக்கு டைரக்ஷன் தெரியாது.

அறிவு

அறிவு

நாங்க சின்னதா குட்டியா ஒரு படம் எடுத்து வச்சிருக்கோம். பாகுபலியை பார்க்கும்போது இதை எடுப்பதற்குள் பைத்தியம் புடிச்சிருக்குமே என்று தான் தோன்றுகிறது. மற்றபடி அதை தொழில்நுட்ப ரீதியாக அனலைஸ் பண்ணும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை என்றார் தனுஷ்.

English summary
Dhanush released the audio of magnum opus Baahubali 2 and said that he doesn't have knowledge to analyse the movie technically.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos