எனக்கு ஹெல்ப் பண்றதுக்கு அம்மா -அப்பா இல்ல... என்னோட பில்சை கட்டறதுக்காக நான் உழைக்கணும்
டெல்லி : கொரோனா காலத்திலும் தன்னுடைய ப்ராஜெக்ட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இந்நிலையில் தான் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் தன்னுடைய பில்சை கட்டுவதற்காக தான் உழைக்கும் கட்டாயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன் காரணமாக தான் தன்னுடைய வேலைக்கு திரும்ப வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிக உயிரிழப்புகள்
இந்தியா முழுவதிலும் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் இல்லாதது கொடுமை
இந்நிலையில் லாக்டவுன் முடியும் வரையில் தன்னுடைய வேலைகளை செய்வதற்கு தான் காத்தருக்க முடியாது என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். செட்களில் மாஸ்க் இல்லாமல் நடிப்பது மிகவும் கொடுமையானது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் தனக்கு இருக்கும் நிதி நெருக்கடியை அடுத்து தன்னுடைய வேலைகளை தான் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சூட்டிங்கிற்கு தயார்
எப்போது தன்னை சூட்டிங்கிற்கு அழைத்தாலும் செல்ல தான் தயாராக உள்ளதாகவும் தன்னுடைய படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கடடாயம் தனக்கும் உள்ளதாகவும் ஸ்ருதி மேலும் கூறியுள்ளார். தனக்கு கட்ட வேண்டிய பில்கள் உள்ளதாகவும் அதற்காகவே தான் வேலை செய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

உதவ தாய், தந்தை இல்லை
தான் சுதந்திரமான செயல்பாடுகளை கொண்டவள் என்றும் தனக்கு உதவ தன்னுடைய தாய் மற்றும் தந்தை இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மற்றவர்களை போலவே தனக்கும் நிதி நெருக்கடி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். லாக்டவுனுக்கு முன்னதாக ஸ்ருதிஹாசன் வெப்சீரிஸ் மற்றும் சலர் படம் ஆகியவற்றில் நடித்து வந்தார்.

திட்டமிட்டு வேலை
கடந்த ஆண்டில் கொரோனா குறித்த தெளிவு இல்லாமல் நீண்ட நாட்களை வேஸ்ட் செய்ததாகவும் ஆனால் தற்போது கொரோனா குறித்த தெளிவு ஏற்பட்டுள்ளதால் அதற்கேற்ப தன்னுடைய பணிகளை திட்டமிட்டு வேலை செய்து வருவதாகவும் ஸ்ருதிஹாசன் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











