»   »  நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை: விஜய் சேதுபதி

நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை: விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் மிகவும் பிசியான ஹீரோ விஜய் சேதுபதி தான். மனிதர் அத்தனை படங்களை கையில் வைத்துள்ளார். அவர் த்ரிஷாவுடன் நடிக்கும் 96 படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா திங்கட்கிழமை நடந்தது.

96 படத்தை பிரேம் குமார் இயக்குகிறார். இந்நிலையில் படம் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது,

காதல் கதை

காதல் கதை

96 படம் 12ம் வகுப்பில் மலரும் காதலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவது. 96ம் ஆண்டு படிக்கும் வகுப்பினரை குறிப்பதே தலைப்பு 96. த்ரிஷா என்னுடன் நடிப்பாரா என்று நினைத்தேன்.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷாவுக்கு 96 படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார். நான் படத்தில் ஒரு சிறு பகுதியில் பள்ளி மாணவனாக வருவேன்.

கவலை

கவலை

கதாபாத்திரத்தின் சவாலை நினைத்து கவலைப்படத் தேவையில்லை. ஒரு நடிகராக நான் உண்மையாக இருந்து, திரைக்கதைப்படி நடிக்க வேண்டும். நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.

ஜெஸி

ஜெஸி

நான் த்ரிஷா, நயன்தாரா, தமன்னா ஆகியோரின் தீவிர ரசிகன். அவர்களுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நான் பார்த்து ரசித்த ஜெஸியுடன் தற்போது ஜோடியாக நடிக்கிறேன் என்றார் விஜய் சேதுபதி.

    English summary
    Vijay Sethupathi who currently has nearly half a dozen Tamil projects in his kitty, believes his purpose as an actor is to be sincere and passionate to the script and not worry about having to prove anything to anybody.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil