For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வடிவேலுக்கு என்னங்க பிரச்சனை...சரத்குமாருக்கு எதுவுமே தெரியாதாம்

  |

  மயிலாடுதுறை : வடிவேலுவுக்கு ரெட்கார்ட் போட்டதும் தெரியாது, நீக்கியதும் தெரியாது . நடிகர் சங்கத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் நடிகனாக மட்டும்தான் உள்ளேன் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  சரத்குமாரும், வடிவேலுவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். சரத்குமார் நடிகர் சங்க தலைவராகவும் இருந்தவர். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளையும் கவனித்தவர். 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வடிவேல் - டைரக்டர் ஷங்கர் இடையேயான பிரச்சனை பற்றி தனக்கு தெரியவே தெரியாது என அவர் கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

  வாரேவா… அடித்து தூக்கும் சிம்பு… பத்து தல படத்தின் தரமான அப்டேட்!வாரேவா… அடித்து தூக்கும் சிம்பு… பத்து தல படத்தின் தரமான அப்டேட்!

  மயிலாடுதுறையில் தனியார் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் , திரைப்பட நடிகருமான சரத்குமார் வருகை புரிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

  8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதயநோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

  முதல்வருக்கு பாராட்டு

  முதல்வருக்கு பாராட்டு

  தற்போது தமிழக சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தனக்கு புகழாரம் சூட்ட வேண்டாமெனவும் , அவையில் உள்ளவர்கள் நேரத்தை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

  உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை

  உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை

  கோடநாடு கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அரசு கூறியிருப்பது தவறு இல்லை என்றும், மேலும் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து வருகின்ற 31ஆம் தேதி கட்சியின் 15 ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அன்று மாவட்ட கழகத் தோழர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார் .

  வடிவேலுக்கு ரெட் கார்டா

  வடிவேலுக்கு ரெட் கார்டா

  வடிவேலுக்கு ரெட்கார்ட் நீக்கம் செய்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வடிவேலுவுக்கு ரெட்கார்ட் போட்டதும் தெரியாது. அதனை நீக்கியதும் தெரியாது. உங்கள் மூலமாக தான் அதனை நான் தெரிந்து கொண்டேன் என கூறினார்.

  எனக்கு சம்பந்தமே இல்லை

  எனக்கு சம்பந்தமே இல்லை

  நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும், நான் நடிகனாக மட்டுமே இருக்கிறேன் என தெரிவித்தார். சரத்குமாரின் இந்த பதில் பலரையும் குழப்பமடைய வைத்துள்ளது.

  பள்ளிகளை திறக்கனும்

  பள்ளிகளை திறக்கனும்

  கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து தமிழக அரசு ஈடுபட்டுள்ளது . அதேசமயம் மாணவர்கள் எத்தனை நாட்கள் பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருக்க முடியும் , அவர்களை பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு அனுப்புவது தான் சரியான முடிவு என தெரிவித்தார்.

  காலில் காயம்

  காலில் காயம்

  தமிழ் கன்னடம் தெலுங்கு என அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்துக் கொண்டு இருப்பதாகவும். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும்படி ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் படப்பிடிப்பு தடைபடாமல் இருக்கவும் , தனது உடல் ஒத்துழைப்பதாலும் படப்பிடிப்புக்கு தொடர்ந்து செல்வதாக அவர் தெரிவித்தார்.

  எப்படி தெரியாமல் போனது

  எப்படி தெரியாமல் போனது

  டைரக்டர் ஷங்கர் தயாரித்த இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் இருந்து வடிவேலு பாதியிலேயே விலகியதால், வடிவேலுவுக்கு எதிராக ரெட்கார்டு போடும் அளவிற்கு போனார் ஷங்கர். இதனால் கடந்த 4 ஆண்டுகளாக வடிவேலு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் திரைத்துறையில் முக்கிய நடிகராக இருக்கும் சரத்குமாருக்கு எப்படி இது தெரியாமல் போனது என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

  English summary
  Sarathkumar in his latest interview says that he didn't know redcard issue against vadivelu. he had no connection with nadigar sangam. now he is just only an actor. Currently he is in ponniyin selvan shooting.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X