அந்த நடிகைக்கு எல்லாம் படுத்தால் எப்படி தான் தூக்கம் வருதோ?: குமுறும் இயக்குனர்

By Siva

Recommended Video

ஜான்சி ராணி திரைப்படத்தில் நடித்தது பற்றி கங்கனா Kangana Ranavat about biopic Manikarnika

மும்பை: கங்கனா ரனாவத்துக்கு இரவில் எப்படித் தான் தூக்கம் வருகிறதோ என்று இயக்குனர் க்ரிஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு மணிகர்னிகா என்ற பெயரில் படமாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்பை துவங்கியபோது ராதா கிருஷ்ண ஜகர்லமுடி என்கிற க்ரிஷ் இயக்குனராக இருந்தார்.

அவர் படத்தில் இருந்து வெளியேறிய பிறகு கங்கனாவே படத்தை இயக்கி நடித்தார். இந்நிலையில் பட பிரச்சனை குறித்து க்ரிஷ் கூறியிருப்பதாவது,

கங்கனா

கங்கனா

கங்கனா முதல் பாதியில் 20 முதல் 25 சதவீத காட்சிகளை இயக்கினார் என்று நினைக்கிறேன். இரண்டாம் பாதியில் வெறும் 10 சதவீத காட்சிகளை இயக்கினார். ஒரு பாடல் மற்றும் அவரின் என்ட்ரி காட்சியை நான் படமாக்கவில்லை. அப்படி இருக்கும்போது 70 சதவீத காட்சிகளை தான் இயக்கியதாக கங்கனா கூறுவதை ஏற்க முடியாது.

நீக்கம்

நீக்கம்

இரண்டாம் பாதியில் நான் வித்தியாசமாக இயக்கியிருந்த சில காட்சிகளை கங்கனா மீண்டும் படமாக்கினார். அது பரவாயில்லை. படம் அருமையாக வந்துள்ளது. அவர் படத்தை பெரிய அளவில் நாசமாக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பெயர்

பெயர்

நான் விலகிய பிறகு சில காட்சிகளை படமாக்கிவிட்டு இயக்கம் கங்கனா ரனாவத் என்று முதல் கிரெடிட் போட்டுள்ளனர். இது நியாயமே இல்லை. இப்படி அடுத்தவரின் உழைப்பை தன் உழைப்பாக காட்டும் கங்கனாவுக்கு இரவில் எப்படித் தான் தூக்கம் வருகிறது என்று தெரியவில்லை.

சோனு சூத்

சோனு சூத்

சோனு சூதின் கதாபாத்திரத்தை முதல் பாதியிலேயே இறந்து போவது போன்று காட்டுமாறு கங்கனா கூறியதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டாம் பாதியில் சோனு தேவையே இல்லை என்றார் கங்கனா. நான் அவரின் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கமல் ஜெயின் கங்கனாவுக்கு ஆதரவு அளித்தார் என்கிறார் க்ரிஷ். கங்கனாவின் செயலால் சோனு சூதும் படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X