twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்கள் தான் என் கடவுள்... எனக்கு அரசியல் தெரியாது: சமுத்திரக்கனி

    |

    ஈரோடு: வரும் தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, தனக்கு அரசியல் தெரியாது என வெளிப்படையாக பதிலளித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி.

    சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி- அமலா பால் நடித்த "நிமிர்ந்து நில்" படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    படத்திற்கு ரசிகர்கள் தரும் ஆதரவை நேரில் கண்டறிவதற்காக ஈரோட்டில் நிமிர்ந்து நில் படம் ஓடும் தியேட்டர்களுக்கு நேரடியாக சென்றார் சமுத்திரக்கனி. தியேட்டர்களில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்தப் பின், செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் சமுத்திரக்கனி.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வேண்டுதல்...

    வேண்டுதல்...

    "நாடோடிகள்" படம் வெளியானால் காங்கேயம் சிவன்மலை கோவிக்கு வந்து தரிசனம் செய்வதாக வேண்டிக்கொண்டேன். அந்த வேண்டுதலை நிறைவேற்ற சிவன்மலைக்கு மகன் ஹா விக்னேஷ்வருடன் சென்று சாமி தரிசனம் செய்தேன்.

    சங்கர் படமா...

    சங்கர் படமா...

    "நிமிர்ந்து நில்" படம் லஞ்சத்தை மையமாக வைத்து இயக்குனர் சங்கர் இயக்கிய படம் போல இருப்பதாக சொல்கிறார்கள். சங்கரை எனக்கு பிடிக்கும். அதனால் சங்கர் படம்போல இருப்பதாக சொல்வதை பெருமையாக நினைக்கிறேன்.

    தேவைப்பட்டால் வன்முறைக்காட்சிகள்...

    தேவைப்பட்டால் வன்முறைக்காட்சிகள்...

    தேவைபட்டால் என் படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கும். வன்முறை காட்சி வைக்காமல் வன்முறையின் விளைவுகளை எப்படி சொல்ல முடியும்?

    இந்தியில்....

    இந்தியில்....

    "நிமிர்ந்து நில்" படம் தெலுங்கில் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடப்படுகிறது. இந்தியிலும் ரீமேக் செய்ய முயற்சி செய்கிறேன்.

    பாலசந்தரைப் பிடிக்கும்...

    பாலசந்தரைப் பிடிக்கும்...

    எனக்கு பிடித்த இயக்குனர் கே.பாலசந்தர். நடிகர்களை பொறுத்தவரையில் எல்லோரையும் எனக்கு பிடிக்கும். இவரை வைத்து படம் எடுக்க வேண்டும். அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று லட்சியம் எதுவும் கிடையாது.

    சசிகுமாரை வைத்து....

    சசிகுமாரை வைத்து....

    யாருடைய கால்சீட்டுக்காகவும் வாய்ப்பு தேடி செல்ல மாட்டேன். புதுசா வர்றவங்களை வைத்து படம் இயக்குவேன். சசிகுமாரை வைத்து 100 படம் எடுப்பேன்.

    ரசிகர்கள் தான் கடவுள்...

    ரசிகர்கள் தான் கடவுள்...

    என்னை பொறுத்த அளவில் ரசிகர்கள்தான் கடவுள்கள். யாருக்கு ஓட்டப்போட போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். எனக்கு அரசியல் தெரியாது' என இவ்வாறு சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

    English summary
    In an interview at Erode the film director Samuthirakani said that he doesn't know any politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X