சன்னி லியோன் ஆபாச பட நடிகையா?: தயாநிதி தான் கூட்டி வந்தார்: வடகறி இயக்குனர்
சென்னை: வடகறி படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள சன்னி லியோன் ஆபாச பட நடிகை என்று தனக்கு தெரியவே தெரியாது எனவும், அவரை தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தான் அழைத்து வந்தார் என்றும் இயக்குனர் சரவண ராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெய், சுவாதியை வைத்து சரவண ராஜன் இயக்கி வரும் படம் வடகறி. இந்த படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்திலும் குத்துப் பாடல் இல்லாமல் இல்லை. அந்த பாடலில் ஆபாச பட நடிகை சன்னி லியோனை ஆட வைத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து இயக்குனர் சரவண ராஜன் கூறுகையில்,

சன்னி
வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள சன்னி லியோன் ஒரு ஆபாச பட நடிகை என்று எனக்கு தெரியவே தெரியாது. நான் அவர் நடித்த படங்களை பார்த்தது இல்லை.

குத்துப்பாட்டு
படத்தில் ஒரு குத்துப்பாட்டு உள்ளது. அதற்கு பிரபலமான நடிகை ஒருவரை ஆட வைக்கலாம் என்று நான் தெரிவித்தேன். உடனே இந்தி படங்களில் நடிக்கும் சன்னி லியோனை ஆட வைக்கலாம் என்று தயாநிதி அழகிரி கூறினார்.

பேச்சுவார்த்தை
குத்துப்பாட்டுக்கு ஆடுவது குறித்து சன்னி லியோனிடம் பேச்சுவார்த்தை நடத்த அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

தாய்லாந்து
குத்துப்பாட்டை செட் போட்டு எடுக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அதை விட தாய்லாந்தில் படமாக்க குறைந்த அளவே செலவாகும் என்பதால் அங்கு படமாக்கினோம்.

டான்ஸ் மாஸ்டர்
பாடலை டான்ஸ் மாஸ்டர் தான் படமாக்கினார். நான் சன்னியுடன் அவ்வளவாக பேசியது கூட கிடையாது. இது எல்லாம் தயாரிப்பாளரின் முடிவு என்றார் சரவண ராஜன்.


Click it and Unblock the Notifications











