»   » பாட்டினு கூப்பிட்டா பிடிக்காதாம் இந்த 82 வயசு ‘அம்மணி’ ஹீரோயினுக்கு!

பாட்டினு கூப்பிட்டா பிடிக்காதாம் இந்த 82 வயசு ‘அம்மணி’ ஹீரோயினுக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களைத் தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள புதிய படம் அம்மணி.

நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ள இப்படத்தில் 82 வயது பாட்டி சுப்புலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் த்ரிஷாவின் பாட்டியாக நடித்திருந்தவர் ஆவார்.

வழக்கமாக தமிழ் சினிமாக்களில் வயதானவர்கள் என்றாலே துணை கதாபாத்திரங்களாகத் தான் வருவார்கள். ஆனால், அவற்றில் இருந்து வேறுபட்டு அம்மணி படத்தின் நாயகியாக வலம் வருகிறார் சுப்புலட்சுமி.

சுப்புலட்சுமி...
  

சுப்புலட்சுமி...

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவராம் சுப்புலட்சுமி. இவர் தனது வயதைப் பொருட்படுத்தாமல் இப்படத்தில் இரவு பகலாக சுறுசுறுப்பாக நடித்துள்ளாராம்.

பாட்டி...
  

பாட்டி...

ஷூட்டிங்கின் போது சுப்புலட்சுமியை யாராவது பாட்டி என அழைத்தால் அவருக்குப் பிடிக்காதாம். தன்னை அனைவரும் மேடம் என்றே அழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினாராம்.

நட்பு...
  

நட்பு...

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த போது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும், சுப்புலட்சுமிக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாம். அதனை ஞாபகத்தில் வைத்தே இந்த முக்கிய கதாபாத்திரத்தை அவருக்கு வழங்கியுள்ளாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.

போனில் கதை...
  

போனில் கதை...

போனில் சுருக்கமாகத் தான் கதை சொன்னாராம் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், அதுவே பிடித்துப் போக உடனடியாக சென்னைக்கு ரயில் ஏறி விட்டாராம் சுப்புலட்சுமி.

முழுக்கதையும்...
  

முழுக்கதையும்...

சென்னை வந்தபிறது அம்மணி படத்தின் முழுக்கதையும் அவருக்கு தெரியுமாம். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறோம் என்பதும் தெரிய வந்ததாம்.

சவால்...
  

சவால்...

இந்தப் படத்தை ஒரு சவாலாக நினைத்து தான் நடித்துள்ளாராம் சுப்புலட்சுமி. அவரது வயதைக் கருத்தில் கொண்டு படக்குழுவும் விட்டுவிட்டு தான் படப்பிடிப்பை நடத்தினார்களாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை அளிக்கப்பட்டதாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil