அப்படிலாம் கூப்பிட்டா எனக்கு பிடிக்காது... பிரஷர் அதிகமாகும்: டென்ஷனான விஜய் சேதுபதி

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபார்ஸி வெப் சீரிஸ் நாளை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.

ராஜ், டிகே இணைந்து இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில், ஷாஹித் கபூர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கோலிவுட்டில் இருந்து தெலுங்கு, இந்தி, மலையாளம் என மற்ற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், சமீபத்தில் பேசிய விஜய் சேதுபதி பான் இந்தியா ஸ்டார் குறித்து மனம் திறந்துள்ளார்.

 விஜய் சேதுபதியின் ஃபார்ஸி

விஜய் சேதுபதியின் ஃபார்ஸி

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமரா என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கான இடத்தைப் பிடித்தார் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், காமெடி ரோல் என வெரைட்டியாக வெளுத்து வாங்கும் விஜய் சேதுபதி, முதன்முறையாக வெப் சீரிஸில் நடித்துள்ளார். டிகே, ராஜ் இருவரும் இணைந்து இந்தியில் ஃபார்ஸி என்ற வெப் சீரிஸ் இயக்கியுள்ளனர். அதில் ஷாஹித் கபூர், ராஷி கண்ணா ஆகியோருடன் விஜய் சேதுபதியும் லீட் ரோலில் நடித்துள்ளார்.

 பான் இந்தியா ஸ்டார்

பான் இந்தியா ஸ்டார்

விஜய் சேதுபதி நடித்த ஃபார்ஸி வெப் சீரிஸ் நாளை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. ஏற்கனவே இந்தியில் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதேபோல், கத்ரினா கைஃப் உடன் மெர்ரி கிறிஸ்துமஸ், மாநகரம் இந்தி ரீமேக்கான மும்பைக்கார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்து மாஸ் காட்டியுள்ளார். இதனால் விஜய் சேதுபதியை பான் இந்தியா ஸ்டார் என ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

 விஜய் சேதுபதி டென்ஷன்

விஜய் சேதுபதி டென்ஷன்

ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது. இதனால் பிரபாஸை பான் இந்தியா ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடினர். அதிலிருந்து பல மொழிகளில் நடிக்கும் நடிகர்களை பான் இந்தியா ஸ்டார் என அழைப்பது வழக்கமாகிவிட்டது. அதன்படி விஜய் சேதுபதியையும் ரசிகர்கள் பான் இந்தியா ஸ்டார் என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து மனம் திறந்துள்ள விஜய் சேதுபதி, தன்னை பான் இந்தியா ஸ்டார் என குறிப்பிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

 விரைவில் கன்னடத்தில் என்ட்ரி

விரைவில் கன்னடத்தில் என்ட்ரி

மேலும், "நான் ஒரு நடிகன். பான் இந்தியா ஸ்டார் என சொல்வது எனக்கு பிடிக்கவில்லை. அது சில நேரங்களில் ஒரு பிரெஷர் கொடுக்கும். நான் எல்லா மொழி படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். அது போதும்" எனக் கூறியுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த ஸ்டேட்மெண்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனிடையே இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் மட்டும் நடித்து வந்த விஜய் சேதுபதி, முதன்முறையாக கன்னடத்திலும் அறிமுகமாகவுள்ளாராம். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் தற்போது கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X