ரசிகர்கள் நல்ல கதைகளைதான் விரும்பறாங்க.. மொழியை பார்ப்பதில்லை.. சொல்கிறார் நடிகை ராஷ்மிகா!

By

சென்னை: ரசிகர்கள் நல்ல கதைகளையே விரும்புகிறார்கள் என்றும் மொழியை பார்ப்பதில்லை என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர், ராஷ்மிகா மந்தனா.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம், ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

டியர் காம்ரேட்

டியர் காம்ரேட்

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா. சலோ படம் மூலம் தெலுங்குக்கு சென்றார். அடுத்து, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதகோவிந்தம் கவனிக்கப்பட, வாய்ப்புகள் குவிந்தன. தேவதாஸ், விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படங்களில் நடித்தார்.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு ஜோடியாக நடித்த சரிலேரு நீக்கெவ்வரு, சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து பெரிய ஹீரோ படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்க இருக்கிறார். இதை சுகுமார் இயக்குகிறார்.

நேஷனல் க்ரஷ்

நேஷனல் க்ரஷ்

அடுத்து சர்வானந்த் நடிக்கும் ஆடலூ மீக்கு ஜோகார்லு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே, 2020 ஆம் வருடத்தின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். அவர் இப்போது இரண்டு இந்தி படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒன்று, மிஷன் மஞ்சு. இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

ஷாந்தனு பாஹி இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அடுத்து அமிதாப் பச்சன் நடிக்கும் டெட்லி என்ற இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். இதை விகாஷ் பால் இயக்குகிறார். இதற்கிடையே, தமிழிலும் ஒரு படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

பிசியான வருடம்

பிசியான வருடம்

இந்நிலையில், அவர் நடித்து இந்த வருடம் ரிலீஸ் ஆகும் படம், பொகுரு. கன்னடப் படமான இதில் துருவா சார்ஜா ஹீரோவாக நடித்துள்ளார். இதில் ஆசிரியையாக நடித்திருக்கிறார். வரும் 19 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இந்நிலையில் இந்த வருடம் தனக்கு பிசியான வருடம் என தெரிவித்துள்ளார் ராஷ்மிகா.

மூன்றாவது படம்

மூன்றாவது படம்

அவர் கூறும்போது, 'பொகுரு படத்தில் கீதா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். இதே கேரக்டர் பெயரில் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. கடந்த 2020 ஆண்டு அனைவருக்கும் மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. இந்த வருடம் பாசிட்டிவான ஆண்டாக மாறும் என நினைக்கிறேன்.

மொழியை பார்ப்பதில்லை

மொழியை பார்ப்பதில்லை

தமிழை அடுத்து இந்தி சினிமாவுக்கு சென்றது பற்றி கேட்கிறார்கள். எல்லா துறையையும் ஒன்றாகவே பார்க்கிறேன். இப்போது ரசிகர்கள், கதைகளைத்தான் பார்க்கிறார்கள். மொழியை பார்ப்பதில்லை. அதனால் நல்ல கதை அமைந்தால், நான் நடிக்கிறேன். அதைவிட்டு என்னை சுற்றி இருக்கும் தடைகளையும் சுவர்களையும் பொருட்டாக நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X