Don't Miss!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- News
ஈரோடு மாநகராட்சியில் குறைகள் இருக்கிறது! ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்ட அமைச்சர் முத்துசாமி!
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Technology
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.. ஆர்ஆர்ஆர் பட நடிகரை விளாசும் நெட்டிசன்கள்!
ஹைதராபாத்: டோலிவுட் நடிகரான ராகுல் ராமகிருஷ்ணா மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையாக பதிவிட்டுள்ள ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆரின் நண்பராக இவர் நடித்திருப்பார்.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் ப்ரின்ஸ் படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் வெளியான ஜதி ரத்னலு படத்திலும் இவர் காமெடியனாக நடித்திருப்பார்.
மகாத்மா
காந்தி
மீது
விமர்சனம்...மீண்டும்
சர்ச்சையில்
சிக்கிய
கங்கனா

காமெடி நடிகர்
விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா. சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படத்தை இயக்கி வரும் இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கத்தில் வெளியான ஜதி ரத்னலு படத்தில் மூன்று நண்பர்களில் ஒருவராக நடித்து காமெடியில் அசத்தி இருப்பார். பத்திரிகையாளரான இவர் படிப்படையாக சினிமாவில் வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஆர்ஆர் படம் தான் கடைசி
ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ராகுல் ராமகிருஷ்ணா. இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். அரசியலில் சேரப் போகிறாரா என்கிற கேள்விகளும் எழுந்தன. ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆரின் நண்பராக நடித்திருப்பார் ராகுல் ராமகிருஷ்ணா.

காதலிக்கு கட்டாய முத்தம்
Getting married, finally, soonly! என கேப்ஷன் கொடுத்து தனது வருங்கால மனைவிக்கு லிப் லாக் கிஸ் அடிக்கும் புகைப்படத்தை இந்த ஆண்டு வெளியிட்டு ஏகப்பட்ட ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். அவங்க வேண்டாம் என தள்ளியும் வலுக்கட்டாயமாக ஏன் கிஸ் அடிக்கிறீங்கன்னு கேட்டு திட்டி இருந்தனர்.

காந்தி கிரேட் இல்லை
அக்டோபர் 2ம் தேதியான இன்று நாடு முழுவதும் காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், "I don't think Gandhi was great" என ட்வீட் போட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார். நீங்க இப்படி சொல்ல கிடைத்திருக்கும் சுதந்திரம் வாங்க போராடியவர்களில் அவரும் முக்கியமானவர் கொஞ்சம் மரியாதையுடன் பேசுங்கள் என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

எது ஜோனிடா காந்தியா
அவரது கமெண்ட் கீழ் ராகுல் காந்தியா? சோனியா காந்தியா? என நெட்டிசன்கள் சிலர் கமெண்ட் போட்டு அவரை கலாய்த்து வந்த நிலையில், ஒரு சில ரசிகர்கள் ஜோனிடா காந்தியா அவர் நல்ல பாடகியாச்சே, பார்க்கவும் செம்மையா இருப்பாரே என கமெண்ட் போட்டு ராகுல் ராமகிருஷ்ணனின் அட்டென்ஷன் சீக்கிங் ட்வீட்டை துவம்சம் செய்துள்ளனர்.