என் அப்பா ரஜினிக்கு அரசியல் வேண்டவே வேண்டாம்: ஐஸ்வர்யா தனுஷ்
சென்னை: என் அப்பா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன் என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள், தனுஷின் மனைவி என்றதையும் தாண்டி இயக்குனர் என்று தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருப்பவர் ஐஸ்வர்யா.
இந்நிலையில் தனது தந்தை மற்றும் கணவர் பற்றி ஐஸ்வர்யா கூறுகையில்,

தனுஷ்
தனஷ் பல விதங்களில் என் தந்தை ரஜினிகாந்த் போன்றவர். என் தந்தை நேரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர். தனுஷும் அப்படித் தான்.

திருமணம்
தனுஷ் என் தந்தை போன்று இருப்பதால் தானோ என்னவோ அவரை நான் திருமணம் செய்து கொண்டேன்.

ரஜினி
என் தந்தை அமைதியாக வாழ விரும்புகிறேன். அதனால் அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் கிங்காக இருக்க வேண்டாம். கிங் மேக்கராக இருந்தால் போதும்.

வை ராஜா வை
3 படத்தில் தனுஷை ஹீரோவாக நடிக்க வைத்தேன். என் இரண்டாவது படமான வை ராஜா வையில் அவர் நடிக்கவில்லை. இது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றார் ஐஸ்வர்யா.

கௌதம் கார்த்திக்
ஐஸ்வர்யா இயக்கும் இரண்டாவது படமான வை ராஜா வையில் கௌதம் கார்த்திக் நாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











