Adipurush: அடியாத்தி ஆதிபுருஷுக்கு வந்த இமாலய சோதனை.. தப்பான ராமாயணம்.. கேன்சலாகும் டிக்கெட்டுகள்!

சென்னை: ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுத்து பட்டி டிக்கெரிங் எல்லாம் 6 மாத காலம் பார்த்த பின்னரும் படம் பிரம்மாஸ்திரமாக இல்லாமல் புஸ்வாணமாக மாறி விட்டது.

பிரபாஸ் ரசிகர்களே படம் நல்லா இல்லை என பிரபாஸையும் இயக்குநர் ஓம் ராவத்தையும் திட்ட ஆரம்பித்து விட்டனர்.

அதை விட பெரிய பிரச்சனையாக பிரபாஸை நம்பி ஏமாந்து சனி, ஞாயிறுகளில் படம் பார்க்க புக் செய்த பலரும் தற்போது டிக்கெட்டுகளை கேன்சல் செய்து வருகின்றனர்.

”I don’t want to teach my daughter wrong Ramayana” - fans cancelled Adipurush tickets

3 மணி நேர டார்ச்சர்: ராமாயண இதிகாசத்தை டிவி சீரியலாக எடுத்து வருடம் முழுக்கப் போட்டாலே ரசிகர்கள் அதை பார்க்க டிவியின் முன் அமர்ந்து விடுவார்கள். ராமநந்த் சாகர் உருவாக்கிய ராமாயாணம் கொரோனா காலத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டே மிகப்பெரிய ஹிட் அடித்தது.

ஆனால், பிரபாஸ் நடித்து வெளியாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தை 3 மணி நேர டார்ச்சர் என்றே ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

நெகட்டிவ் விமர்சனங்கள்: ஆதிபுருஷ் படத்தில் ஏகப்பட்ட இதிகாச பிழைகள் இருப்பதாக நெட்டிசன்கள் முதல் விமர்சகர்கள் வரை படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர். இலங்கை மன்னன் ராவணன் கதாபாத்திரத்தை ஏதோ சூப்பர் ஹீரோ படத்தில் இருந்து காப்பி அடித்ததை போல ஓம் ராவத் உருவாக்கி இருப்பதற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

”I don’t want to teach my daughter wrong Ramayana” - fans cancelled Adipurush tickets

மேலும், வானர கூட்டங்களின் காட்சிகள் எல்லாம் பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் படத்தில் இருந்து அப்பட்டமாக திருடியிருப்பதாகவும் விமர்சகர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளனர்.

தப்பான ராமாயணம்: ஆதிபுருஷ் படத்தில் தப்பான ராமாயணக் காட்டப்படுவதாகவும், எங்கள் குழந்தைகளுக்கு தப்பான ராமாயணத்தை சொல்லிக் கொடுக்க விரும்பவில்லை. அதனால், டிக்கெட்டுகளை கேன்சல் செய்கிறோம் என சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்தை பார்க்க புக் செய்திருந்த டிக்கெட்டுகளை ரசிகர்கள் கேன்சல் செய்து பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர்.

”I don’t want to teach my daughter wrong Ramayana” - fans cancelled Adipurush tickets

தியேட்டர்களுக்கு நஷ்டம்: முதல் 3 நாட்கள் படத்தை புக் செய்து விட்டு பிரபாஸை நம்பி ஏமாந்து பல கோடியை மக்கள் பாக்ஸ் ஆபிஸில் கொட்டுவதற்கு பதிலாக, இப்படி திடீரென ரிட்டர்னாகி டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய ஆரம்பித்து இருப்பது தியேட்டர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.

தியேட்டர்கள் நஷ்டமடைந்தால், விநியோகஸ்தர்கள், தயாரிப்பு தரப்பு என அனைவருக்குமே பாதிப்பு தான் மிஞ்சும் என்றும் தேவையில்லாமல் ரீவொர்க் செய்யாமல் அப்பவே படத்தை ரிலீஸ் செய்திருந்தால் பல கோடி மிச்சமாகி இருக்கும் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X