Exclusive : “சிம்பு.. யாஷிகா.. பிராச்சி.. நான்”.. மனம் திறக்கும் மஹத்!

யாஷிகாவுடன் புதிய படத்தில் ஜோடியாக நடிக்கிறார் மஹத்.

Recommended Video

மனம் திறக்கும் மஹத்!- வீடியோ

சென்னை: புதிய படங்களைத் தேர்வு செய்வதில் சிம்பு தனக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாக நடிகர் மஹத் தெரிவித்துள்ளார்.

வல்லவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மஹத். மங்காத்தா படத்தில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஹத், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ரெட் கார்டு கொடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது சக போட்டியாளர்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் ஒவ்வொரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில், பரதன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மஹத் - யாஷிகா நடிக்கும் படத்தை மேக்வென் என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். இப்படத்தின் படப்பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

பயம்:

பயம்:

அதில் கலந்து கொண்ட மஹத், ஒன் இந்தியாவிடம் பேசியதாவது, "பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கிறது. நிறைய படங்கள் வருகின்றன. ஆனால் அதில் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன். ஒரு பக்கம் கொஞ்சம் ஓவராக போகிறோமோ என்ற பயம் இருக்கிறது. அதனால் வரும் படங்களை எல்லாம் ஒப்புக்கொள்வதில்லை.

வழிகாட்டி:

வழிகாட்டி:

எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பது சிம்பு தான். ஒரு நண்பனாக மட்டும் இல்லை. ஒரு நல்ல வழிகாட்டியாகவும் சிம்பு இருக்கிறார். எனது படங்களின் கதைகளை கேட்டு தேர்வு செய்வதிலும் உதவுகிறார்.

நீண்ட நாள் ஆசை:

நீண்ட நாள் ஆசை:

நானும் யாஷிகாவும் சேர்ந்து இந்த படத்தில் நடிக்கிறோம். இந்த படத்தை இளம் இயக்குனர்கள் மகேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இயக்குகின்றனர். தமன் இசையமைக்கிறார். தமனுடன் வேலை செய்ய வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்கிறது. இது ஒரு ஹாரர் த்ரில்லர் படம்.

காதலி பிராச்சி:

காதலி பிராச்சி:

நானும் யாஷிகாவும் சேர்ந்து நடிப்பது குறித்து எனது காதலி பிராச்சிக்கு ஏற்கனவே தெரியும். அவர் எதுவும் தவறாக நினைக்க மாட்டார். ஏனென்றால் இது எனது வேலை என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

நேர்மையானவன்:

நேர்மையானவன்:

யாஷிகாவுக்கு நான் தான் வழிகாட்டியாக இருக்கிறேன் என நிறைய பேர் சொல்கிறார்கள். அது உண்மையல்ல. என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதால் எங்களை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வரலாம். அதை பற்றி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் நான் நேர்மையாக நடக்கிறவன். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுபவன்", என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X