எப்படி கழுவி ஊற்றினாலும் கவலையில்லை... ஒரு கோடி டிஸ்லைக்ஸ் வாங்கிய பிறகும் பிரபல நடிகை அசால்ட்!

சென்னை: பிரபல நடிகையான ஆலியா பட் ரசிகர்கள் எப்படி கழுவி ஊற்றினாலும் தனக்கு கவலையில்லை என கூறியுள்ளார்.

Recommended Video

Sadak 2 Trailer Review In Tamil | Filmibeat Tamil

முகேஷ் பட்டின் விஷேஸ் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் படம் சதக் 2. இந்தப் படத்தை ஆலியா பட்டின் தந்தையான மகேஷ் பட் இயக்கியுள்ளார்.

இதில் சஞ்சய் தத், பூஜா பட், ஆலியா பட் மற்றும் ஆதித்யா ராய் கபூர், குல்ஷன் குரோவர், மகரந்த் தேஷ்பாண்டே உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

10 மில்லியன் டிஸ்லைக்ஸ்

10 மில்லியன் டிஸ்லைக்ஸ்

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த 12ஆம் தேதி வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளேயே ஒரு மில்லியனுக்கு மேல் டிஸ்லைக்குகளை குவித்தது சடக் 2. இந்நிலையில் சடக் 2 படத்தின் ட்ரெயிலர் இன்று வரை 10 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது.

அதிர்ச்சியில் படக்குழு

அதிர்ச்சியில் படக்குழு

வெறும் ஐந்தரை லட்சம் லைக்குகளை மட்டுமே பெற்றுள்ளது இந்த ட்ரெயிலர். 735 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலருக்கே ரசிகர்கள் இப்படி எதிர்ப்பை காட்டுவது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

வாரிசுகள்தான் காரணம்

வாரிசுகள்தான் காரணம்

கடந்த ஜூன் மாதம் பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ளது தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு ஆலியாபட், கரன் ஜோஹர் மற்றும் சல்மான்கான் உள்ளிட்ட சில பாலிவுட் வாரிசுகள்தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

அவர்களை பின்தொடருவதை குறைத்த ரசிகர்கள், அவர்களின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் ஆலியா பட், ரியா சக்ரவர்த்தி உட்பல சுஷாந்த் மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறப்படும் பலரின் சமூக வலைதள பக்கத்திலும் கமெண்ட் மூலம் கழுவி ஊற்றி வருகின்றனர்.

நீக்கத் திட்டம்?

நீக்கத் திட்டம்?

இதனால் ஆலியா பட் உட்பட பலரும் தங்களின் கமென்ட் ஆப்ஷனை முடக்கி வைத்துள்ளனர். திரையுலகில் எந்த திரைபடமும் செய்யாத வகையில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட டிஸ்லைக்குகளை பெற்று மோசமான சாதனையை செய்துள்ளதால் ஆலியா பட் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களில் இருந்து அவரை நீக்கி விடலாமா என யோசித்து வருகிறது படக்குழு.

கவலையில்லை

கவலையில்லை

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் என்னை வெறுப்பவர்களை பற்றியும் அவதூறாக பேசுபவர்களையும் பற்றியும் நான் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. விரும்புகிறவர்களும் வெறுப்பவர்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது.

பாராட்ட வேண்டும்

பாராட்ட வேண்டும்

ஹேட்டர்ஸ் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் இரண்டுமே இருக்கும். எனது பட டிரெய்லரை டிரெண்ட் செய்ததால் அவர்களை பாராட்ட வேண்டும். டிஸ்லைக் செய்பவர்களை பற்றி எனக்கு கவலையில்லை என அசால்ட்டாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X