ஒரு பைசா கூட வாங்கல.. எங்கம்மா கேன்சரால பாதிக்கப்பட்டாங்க.. வசமா சிக்கித் தவிக்கும் பூனம் பாண்டே!
மும்பை: நடிகை பூனம் பாண்டே தான் இறந்து விட்டதாக ஊர் உலகத்தையே நம்ப வைத்து அடுத்த நாள் தான் உயிரோடு தான் இருக்கிறேன் என வீடியோ போட்டு அதிர்ச்சியை கிளப்பினார். ஆனால், இன்னமும் பொதுவெளிக்கு வந்து பத்திரிகையாளர்களை சந்திக்காமல் அவர் வீடியோக்கள் வாயிலாகவே பேசி வருகிறார் என்கிற விமர்சனங்களும் தவறான புரமோஷன் செய்தது அவருக்கு ஏகப்பட்ட பின் விளைவுகளை உருவாக்கி ஜெயிலுக்கே போகும் நிலைக்கு தள்ளிவிடும் என்றெல்லாம் கருத்துக்கள் கிளம்பி உள்ளன.
அதனால், பயந்து போன பூனம் பாண்டே தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு தன் மீது தவறு இல்லை என்றும் நல்ல நோக்கத்திற்காகவே இப்படியொரு விழிப்புணர்வை ஏற்படுத்த அப்படி பொய் சொல்லி விட்டேன் என விளக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

காசுக்காக டிராமாவா?: ஆபாச படங்களில் நடித்து வந்த பூனம் பாண்டே திடீரென அன்னை தெரசா ரேஞ்சுக்கு மாறிவிட்டதற்கு பின்னணியில் 25 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தான் இப்படியொரு விழிப்புணர்வு டிராமாவை அவர் போட்டிருக்கிறார் என உமைர் சந்து போட்ட ட்வீட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டில் பல பிரபலங்கள் காசுக்காகத்தான் இப்படி கேவலமான நாடகத்தை பூனம் பாண்டே அரங்கேற்றியுள்ளார் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.
உள்ளே தூக்கி போடுங்க: பூனம் பாண்டே செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அவரை கைது செய்து ஜெயிலில் போட வேண்டும் என பாலிவுட்டில் சில பிரபலங்களே கொந்தளித்துள்ளனர். அனைத்து இந்திய திரைப்பட சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் பூனம் பாண்டேவுக்கு எதிராக புகாரும் அளித்துள்ளனர். இவரை சும்மா விட்டால், இதே போல நாளைக்கு பலரும் தங்கள் பட புரமோஷனுக்கு கூட இப்படி செய்வார்கள் என விளாசி வருகின்றனர்.
அம்மாவுக்கு கேன்சர்: இந்நிலையில், தனக்கு எதிராக ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியதை அறிந்து கொண்ட பூனம் பாண்டே தொடர்ந்து மன்னிப்பு கேட்டு வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். மேலும், எந்தவொரு அறிவும் இல்லாமல் இப்படி செய்யவில்லை என்றும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தவில்லை. எங்க அம்மாவே தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் தான் எனக்கூறியுள்ளார்.
ஒரு பைசாக்கூட வாங்கல: நடிகை பூனம் பாண்டே 25 லட்சம் ரூபாய் பணத்துக்காகத்ஹ்டான் இந்த பப்ளிசிட்டி ஸ்டன்ட் செய்தார் என குற்றச்சாட்டுகள் கிளம்பிய நிலையில், ஒரு பைசாக்கூட வாங்கல என்றும் Schbang எனும் தன்னார்வ தொண்டு அமைப்புடன் இணைந்து தான் கர்ப்பவாய் புற்றுநோய்க்கான விழிப்புணர்வாக இதை செய்தேன் என தெளிவுப்படுத்தி உள்ளார். பூனம் பாண்டேவை அண்டர்டேக்கர் என்றும் நீங்க உயிரோடத்தான் இருக்கீங்கன்னு நம்ப மாட்டோம். பிரஸ்மீட் வைங்க என ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் பக்கத்தில் வெளுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











