லாஸ்லியா கூட பேச்சு வார்த்தையே இல்லை.. எல்லாம் முடிஞ்சு போச்சு!
சென்னை : சின்னத்திரையிலிருந்து இப்பொழுது வெள்ளித்திரையில் கால் தடத்தை பதித்துள்ளார் நடிகர் கவின்
சீரியலில் பெருவாரியான ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்த கவினுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பல லட்சம் ரசிகர்கள் கிடைத்தனர்
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கவின் லாஸ்லியா உடன் இப்பொழுது பேச்சுவார்த்தையில் இல்லை எல்லாம் முடிந்துவிட்டது என பகிரங்கமாக கூறியுள்ளார்

வெள்ளித்திரையிலும் ஹீரோவாக
சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கவின். அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இளம்பெண்கள் மத்தியில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த கவின் இப்பொழுது வெள்ளித்திரையிலும் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் நடித்தபோதே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பல லட்சம் ரசிகர்களை கொண்டார்.

லாஸ்லியாவுடன் காதல்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் வந்தார் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில் நான் என்னை நிரூபிக்க வந்துள்ளேன் என ஆட்டத்தை ஆரம்பித்த கவின் ஒரு கட்டத்தில் சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் காதலில் விழுந்தார்.
பார்ப்பதற்கே ரொம்ப க்யூட்டாக இருந்த இவர்களது காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கவின், லாஸ்லியா காதல் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது . அதன்பிறகு லாஸ்லியாவின் அப்பாவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கண்டித்து விட்டு சென்றார். அதன் பிறகும் இருவரும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தனர்.

ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதது போல
கவின் மற்றும் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதது போலவே நடந்து கொண்டுள்ளனர். பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த உடனேயே கவின் லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்று வெற்றிபெற்றது. அதேபோல லாஸ்லியாவும் ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்
Recommended Video

பேச்சு வார்த்தையே இல்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்த கவின் லாஸ்லியா ஜோடி இப்பொழுது தங்களது வாழ்க்கைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கவினிடம் லாஸ்லியா குறித்து கேட்ட பொழுது லாஸ்லியாவுடன் இப்பொழுது பேச்சு வார்த்தையே இல்லை எல்லாம் முடிந்து விட்டது. லாஸ்லியா நடித்த ஃப்ரெண்ட்ஷிப் படத்தை கூட நான் இன்னும் பார்க்கவில்லை. நான் என்னுடைய பட வேலைகளில் மிக பிஸியாக உள்ளேன் என பேசியுள்ளார் . கவினின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











