சிவகார்த்திகேயனும் நானும் வேற வேற ட்ராக்... எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை

சென்னை : நடிகர் அருண் விஜய் ஹரி இயக்கத்தில் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் யானை

மாபியா படத்தை தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் அருண் விஜய்யுடன் இணைந்து இந்த படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்

இந்த நிலையில் யானை படக்குழு கலந்துகொண்ட நேர்காணலில் நானும் சிவகார்த்திகேயன் வேற வேற ட்ராக் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது எனன் அருண் விஜய் கூறியுள்ளார்.

ஆக்சன் கதாநாயகனாக உள்ளார்

ஆக்சன் கதாநாயகனாக உள்ளார்

பல தோல்விகளைக் கடந்து தடைகளை தகர்த்தெரிந்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்சன் கதாநாயகனாக உள்ளார் நடிகர் அருண்விஜய் மிகப் பெரிய திரை குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனது ஒவ்வொரு படங்களிலிருந்தும் கற்றுக்கொண்டு இப்பொழுது கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய்யின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் அருண் விஜய் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறார்

முதன்முறையாக ஹரி இயக்கத்தில்

முதன்முறையாக ஹரி இயக்கத்தில்

இயக்குனர் ஹரிக்கு மிக நெருங்கிய உறவினராக இருந்தாலும் இதுவரை இருவரும் இணைந்து எந்த ஒரு படத்திலும் பணியாற்றாமல் இருந்தனர் இந்த நிலையில் இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் யானை. ஹரியின் வழக்கமான கமர்ஷியல் பார்முலா அதிரடி ஆக்சன் சண்டைக் காட்சியுடன் உருவாகியுள்ள யானை படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார்,அருண்விஜய் பிரிய பவனி சங்கர் யோகி பாபு புகழ் சஞ்சீவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது அனைத்து பணிகளும் முடிந்து படம் மிக விரைவிலேயே ரிலீசுக்கு தயாராக உள்ளது

அருண் விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல்

அருண் விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல்

இந்த நிலையில் அருண் விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை நடந்து கொண்டிருக்கிறது. என சமூக வலைதளங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. சிலமுறை அருண் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் இதற்காக போட்டி போட்டு சண்டை செய்த சம்பவங்களும் இங்கு உண்டு

சிவகார்த்திகேயனும் நானும் வேற வேற ட்ராக்

சிவகார்த்திகேயனும் நானும் வேற வேற ட்ராக்

யானை படத்தின் ரிலீஸ் புரமோஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறது படக்குழு. இந்த நிலையில் சமீபகத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய அருண் விஜய் சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை அது ஒரு சிறிய மிஸ்சண்டர்ஸ்டாண்டிங் தான். சிவகார்த்திகேயன் தான் என்னுடைய படத்தின் டிரைலரை வெளியிட்டார். எனவே எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை.கார்த்திகேயனும் நானும் வேற வேற ட்ராக் என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X