twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'எங்களை யாராலும் பிரிக்கவே முடியாது என நினைத்தேன்..' பீட்டர்பால் விவகாரம் பற்றி வனிதா ட்வீட்!

    By
    |

    சென்னை: எங்களை யாராலும் பிரிக்கவே முடியாது என நினைத்தேன் என்று பீட்டர் பால் விவகாரம் பற்றி நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

    Recommended Video

    தற்போது உண்மையை சொன்ன Vanitha | Filmibeat Tamil

    நடிகை வனிதா, பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டதை அடுத்து பரபரப்பு பிரச்னை கிளம்பியது.

    விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

    'இது நான் எதிர்பார்க்காத ஒன்று.. பீட்டர்பால் பற்றி குறை சொல்ல விருப்பம் இல்லை..' வனிதா விஜயகுமார்! 'இது நான் எதிர்பார்க்காத ஒன்று.. பீட்டர்பால் பற்றி குறை சொல்ல விருப்பம் இல்லை..' வனிதா விஜயகுமார்!

    வனிதாவுக்கு எதிராக

    வனிதாவுக்கு எதிராக

    பீட்டர் பாலின் முதல் மனைவி கொடுத்த புகாரை அடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். நடிகை வனிதாவை பலர் மோசமான திட்டி தீர்த்தனர். அதற்கு அவரும் பதிலடி கொடுத்து வந்தார்.

    கடுமையாக விளாசினார்

    கடுமையாக விளாசினார்

    இந்தப் பிரச்னையில் கருத்து தெரிவித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை, நடிகை வனிதா இணையதளம் ஒன்றின் நேரலையில் கடுமையாக விளாசினார். ஒருமையில் திட்டிய அவர், போடி வாடி என்றும் சொன்னார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நஷ்ட ஈடு கேட்டு, நோட்டீஸ் அனுப்பினார் லட்சுமி ராமகிருஷ்ணன். பதிலுக்கு அவரும் நோட்டீஸ் அனுப்பினார்.

    வீட்டை விட்டு

    வீட்டை விட்டு

    இந்நிலையில் வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் பிரச்னை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து பீட்டர்பாலை, வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: யாராலும் எங்களைப் பிரிக்க முடியாது என நினைத்தேன். ஆனால், அவர் உடல் நலம் பற்றிய பயம் வந்தது.

    இழந்து விடுவேனோ

    இழந்து விடுவேனோ

    எங்கே அவரை இழந்து விடுவேனோ என்கிற பயம் ஒரே மாதத்தில் இரு முறை ஏற்பட்டது. அதுதான் மோசமான வேதனையாகவும் உணர்வாகவும் இருந்தது. அவரை இரண்டு முறையும் உயிரோடு வீட்டுக்கு அழைத்து வந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன். நாம் அன்பு செலுத்தும் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வந்தால் வாழ்க்கை மாறும்.

    வேதனையில் மகிழ்ச்சி

    வேதனையில் மகிழ்ச்சி

    அவரை பார்த்துக் கொள்வதே வேலையாக இருந்தது. அவரை இழந்து விடுவோமோ என்ற வலியை தாங்க முடியவில்லை. இன்றும் கூட அதே வேதனையில்தான் இருக்கிறேன். இதற்கிடையே சில மோசமானவர்கள், என் வாழ்க்கையை வைத்து பணமும், புகழும் சம்பாதிக்கிறார்கள். தனிப்பட்ட 2 பேரின் வாழ்க்கையை கேலி செய்தும் விவாதித்தும் மற்றவர்களின் வேதனையில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    மறைக்க மாட்டேன்

    மறைக்க மாட்டேன்

    என் வாழ்க்கையில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை நேர்மையாக, வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறேன். நான் எதையும் மறைக்க மாட்டேன், மறைப்பதற்கு ஏதுமில்லை. இப்போது பெரிய சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். இதை எப்படி சரி செய்வது என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

    சவாலை எதிர்கொள்கிறேன்

    சவாலை எதிர்கொள்கிறேன்

    இது வாழ்வா, சாவா என்பது பற்றியது ஆகும். நான் வேதனையில் இருக்கிறேன். அன்பு தான் நான் விரும்புவது. அதை இழக்க பயமாக இருக்கிறது. என் வேலை, குழந்தைகள் பாதிக்கப்படாமல் இந்த சவாலை எதிர்கொள்கிறேன். என் வாழ்வில் எப்போதுமே போராட்டம்தான். இது எனக்கு புதிது அல்ல. இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.

    English summary
    Vanitha vijayakumar says, 'I am an honest straight forward person who shares everything good and bad in my life to the world'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X