twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபுதேவாவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு!

    |

    சென்னை : நடிகரும் இயக்குனருமான தங்கர்பச்சான் கிராமத்து வாழ்வியலை அப்படியே அழகாக திரைப்படங்களில் காட்டக் கூடிய மிகச் சிறந்த இயக்குனர்.

    அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, களவாடிய பொழுதுகள், அம்மாவின் கைபேசி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள தங்கர்பச்சான் இப்பொழுது இயக்கியுள்ள திரைப்படம் டக்கு முக்கு திக்கு தாளம்

    உயிரோட்டம் மிகுந்த படங்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருந்த தங்கர்பச்சான் பிரபுதேவாவை தனக்கு பிடிக்கவே பிடிக்காது என பேசியுள்ளார்

    உண்மைத் தன்மை மாறாமல்

    உண்மைத் தன்மை மாறாமல்

    மண் மணம் மாறாத கிராமத்து வாழ்வியலை படங்களில் காட்டுவது அவ்வளவு எளிதல்ல. அவ்வாறு காட்டிய இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த வகையில் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கிய பல திரைப்படங்கள் கிராமத்து வாழ்வை மிக அழகாகவும் உண்மைத் தன்மை மாறாமலும் அப்படியே காட்டி இருந்ததால் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படைப்புகளுமே சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது குறிப்பாக தங்கர் பச்சனின் அறிமுகப் படமான அழகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

    ரசிகர்கள் மனதில் மிக ஆழமாக பதிந்தது

    ரசிகர்கள் மனதில் மிக ஆழமாக பதிந்தது

    அழகி என்ற அழகிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான தங்கர்பச்சான் அதைத் தொடர்ந்து சேரன் ஹீரோவாக நடித்த சொல்ல மறந்த கதை என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்கள் மனதில் மிக ஆழமாக பதிந்தது

    ஹீரோவாகவும் நடித்தார்

    ஹீரோவாகவும் நடித்தார்

    அந்த நிலையில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற படத்தை இயக்கியதுடன் அதில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார். இயக்குனராக தனி முத்திரையைப் பதித்த தங்கர்பச்சான் ஹீரோவாகவும் இந்த படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள்,அம்மாவின் கைப்பேசி என தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றன.

    டக்கு முக்கு திக்கு தாளம்

    டக்கு முக்கு திக்கு தாளம்

    இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கர்பச்சான் இப்பொழுது டக்கு முக்கு திக்கு தாளம் என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது உள்ள இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கின்ற வகையில் இப்படம் உருவாகி இருக்க மிக விரைவிலேயே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

    பிரபுதேவாவை பிடிக்கவே பிடிக்காது

    பிரபுதேவாவை பிடிக்கவே பிடிக்காது

    இந்நிலையில் சாய் வித் சித்ராவில் பேசிய தங்கர்பச்சான் பிரபுதேவாவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. எப்ப பார்த்தாலும் ஒரு மனுஷன் டான்ஸ் ஆடிக்கிட்டே இருந்ததால் எனக்கு அவரைப் பார்த்தாலே போரடித்து விட்டது. இந்த நிலையில் மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது.

    கேட்கும் மனநிலையில் இல்லை

    கேட்கும் மனநிலையில் இல்லை

    களவாடிய பொழுதுகள் படத்தை இயக்க தயாராகி கொண்டு இருந்த சமயத்தில் எனது நண்பர் ஒருவர் பிரபுதேவா இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினார். நானும் பிரபுதேவாவை சந்தித்து படத்தின் கதையைக் கூறினேன். அப்பொழுது அவர் கேட்கும் மனநிலையில் இல்லை எனவே கதை புத்தகமாக பிரபுதேவாவிடம் கொடுத்து விட்டு வந்துவிட்டேன் . கொடுத்த ஒரே நாளில் அனைத்து பக்கங்களையும் படித்து முடித்துவிட்டு எனக்கு தொலைபேசியில் அழைத்து இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்றார்.களவாடிய பொழுதுகள் படத்தை இயக்க தயாராகி கொண்டு இருந்த சமயத்தில் எனது நண்பர் ஒருவர் பிரபுதேவா இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினார். நானும் பிரபுதேவாவை சந்தித்து படத்தின் கதையைக் கூறினேன். அப்பொழுது அவர் கேட்கும் மனநிலையில் இல்லை எனவே கதை புத்தகமாக பிரபுதேவாவிடம் கொடுத்து விட்டு வந்துவிட்டேன் . கொடுத்த ஒரே நாளில் அனைத்து பக்கங்களையும் படித்து முடித்துவிட்டு எனக்கு தொலைபேசியில் அழைத்து இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்றார்.

    எனக்கு பிரபுதேவா தம்பி மாதிரி மாறிவிட்டார்

    எனக்கு பிரபுதேவா தம்பி மாதிரி மாறிவிட்டார்

    பிரபுதேவா சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின் என்னுடைய களவாடிய பொழுதுகள் படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்து எனக்கு மிகவும் நெருக்கமானார். இப்பொழுது என்னுடைய குடும்பத்தில் ஒருவராக என்னுடைய தம்பியை போல பிரபுதேவா எனக்கு நெருக்கமாகி விட்டார். என பிரபுதேவாவை பற்றி தனக்கு இருந்த எண்ணம் எப்படி மாறியது என்ற தகவலை தங்கர்பச்சான் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

    English summary
    I dont Like Prabu Deva till Minsara Kanavu Movie Release Says thangar bachan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X