லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க.. அவமானமா இருக்கு.. மஞ்சு வாரியர் என்ன இப்படி சொல்லிட்டாங்க!

கொச்சி: மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர். சில காரணங்களால் சினிமாவில் இருந்து கொஞ்சகாலம் ஓய்வில் இருந்த மஞ்சு வாரியர் அதன் பின்னர் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பின்னர் அழுத்தம் திருத்தமான படங்களில் மட்டும் நடிக்க முடிவெடுத்து நடித்து வருகின்றார். இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். இதனால் இவர் நடிக்கும் மலையாளப்படங்களையும் ரசிகர்கள் தேடித் தேடி பார்க்கின்றனர்.

தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கும் அளவிற்கு ஒரு சூப்பர் ஸ்டாராகவே நடிகை மஞ்சுவாரியர் உருவாகியுள்ளார். இவர் தமிழில் எண்ட்ரி கொடுத்த படம் அசுரன். அசுரன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். திருமண வயதில் உள்ள மகனுக்கு தாயாக நடித்த நடிகை மஞ்சு வாரியர் தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலமும், தெளிவான தென் தமிழகத்து தமிழ் உச்சரிப்பின் மூலமும் அட்டகாசப்படுத்தியிருப்பார்.

Manju Warrier Lady Superstar Nayanthara

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் மஞ்சு வாரியர், தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் மஞ்சு வாரியர் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தொடர்பாக தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவமானம்: அதாவது, " என்னை ஒரு சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது, சமூக வலைதளங்களில் தேவையில்லாத விவாதங்களை உண்டாக்கி வருகிறது. இது எனக்கு தனிப்பட்ட முறையில் அவமானமாக உள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு என சில வரைமுறைகளை வைத்திருக்கின்றார்கள். ஆனால், உண்மையில் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், ரசிகர்களின் அன்பு ஒன்றே போதும்" என கூலாக பதில் சொல்லியுள்ளார்.

Manju Warrier Lady Superstar Nayanthara

நயன்தாரா: மஞ்சு வாரியரின் இந்த பதில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் என்றால் இன்றை சினிமா உலகில் மாபெரும் கௌரவமாக பார்க்கப்படும் நிலையில், மஞ்சு வாரியர் கூலாக, சூப்பர் ஸ்டார் பட்டத்தினை வேண்டாம் எனக் கூறியுள்ளது என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஏற்கனவே நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வரும் நிலையில், நயன்தாரா, மஞ்சு வாரியரின் மிகவும் நெருக்கமான தோழி என்பதால் கூட இவ்வாறு கூறியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

Manju Warrier Lady Superstar Nayanthara

வேட்டையன்: ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனான வேட்டையன் படத்தில் நடிப்பது தொடர்பாக தனது மனதில் உள்ள எண்ணத்தை மிகவும் தைரியமாக வெளிப்படுத்தி இருந்தார். அதாவது, " நான் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவியாக நடிக்கின்றேன். எனக்கு முதலில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்றார் எனத் தெரியாது. நான் ஜெய் பீம் என்ற தரமான படத்தினை எடுத்த ஞானவேல் சாரின் படம் என்பதால் இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டேன். எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜோடியாக நடிக்கின்றேன் என்பதை விடவும், ஞானவேல் என்ற இயக்குநரின் படத்தில் நடிக்கின்றேன் என்ற பொறுப்பு மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஜெய் பீம் படத்தினை எடுத்த ஞானவேல் படத்தில் நடிப்பதுதான் எனக்கு மனதில் ஓடிக்கொண்டு இருந்தது" என தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X