ஆயுர்வேத காரணங்களுக்காக.. தினமும் மாட்டுக் கோமியம் குடிக்கிறேன்.. நடிகர் அக்ஷய்குமார் தகவல்!
மும்பை: தினமும் மாட்டுக் கோமியத்தைக் குடித்து வருவதாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார். இவர் தமிழில், ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருந்தார்.
ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள லக்ஷ்மி பாம் படத்தில் நடித்திருக்கிறார். இது 'கஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக்.

மேன் வெர்சஸ் வைல்டு
இந்தப் படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இப்போது பெல்பாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங், ஸ்காட்லாந்தில் நடந்து வருகிறது. இதில் ஹூமா குரேசி, லாரா தாத்தா உள்பட பலர் நடிக்கின்றனர். இதற்கிடையே, டிஸ்கவரி சேனலில் வெளியாகும், மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்
இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் சாகசக்காரருமான பியர் கிரில்ஸ் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். உலகப்புகழ் பெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

அக்ஷய் குமார்
நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி, கடந்த சில மாதங்களுக்கு முன் ஒளிப்பரப்பாகி, சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அக்ஷய் குமாரும் இதில் பங்கேற்றுள்ளார். கர்நாடக மாநிலம் பந்திபூர் வனப்பகுதியில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டன.

யானை சாணத்தில் டீ
இதன் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இதை அக்ஷய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில் பியர் கிரில்ஸ் உடன் #IntoTheWild நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு அதில் அதிக சவால்கள் இருக்கும் என நான் நினைத்தேன். ஆனால் பியர் கிரில்ஸ் எனக்கு யானை சாணத்தில் டீ போட்டு கொடுத்தார் என்று கூறியிருந்தார்.

ஹூமா குரேசி
இந்நிலையில், ஸ்காட்லாந்தில் படப்பிடிப்பில் இருக்கும் அக்ஷய்குமார், இன்ஸ்டாகிராம் லைவில், பியர் கிரில்ஸுடனான தனது அனுபவங்களை பேசினார். பியர் கிரில்ஸும் லைவ் இருந்தார். நடிகைகள் ஹூமா குரேசி, லாரா தத்தா ஆகியோரும் இணைந்தனர். அப்போது யானை சாணத்தில் டீ குடிக்க, எப்படி உங்களை பியர் சம்மதிக்க வைத்தார் என்று கேட்டார் ஹூமா.
Recommended Video

தினமும் கோமியம்
அதற்கு பதிலளித்த நடிகர் அக்ஷய் குமார், 'பியர் சொன்னதும் அதற்காக நான் கவலைப்படவில்லை. மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் நான் தினமும் ஆயுர்வேத காரணங்களுக்காக, மாட்டு கோமியத்தை அருந்தி வருகிறேன், அதனால் இது பரவாயில்லை என்று தோன்றியது எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications