நான் அனாதையானது போன்று உணர்கிறேன்: குஷ்பு கண்ணீர்
சென்னை: நான் அனாதையானது போன்று உணர்கிறேன் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்வீட்டியுள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். சகாப்தம் முடிந்துவிட்டது, சூரியன் அஸ்தமனமாகிவிட்டது என்று அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நான் அனாதையானது போன்று உணர்கிறேன் என்றார்.
ட்விட்டரில் தனது டிஸ்பிளே பிக்சரில் தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை வைத்துள்ளார் குஷ்பு.
Comments


Click it and Unblock the Notifications