வலிக்காமல் கையை பிடிக்க, கட்டிப்பிடிக்க கற்றுக் கொடுத்தார் ரம்யா: சத்யா வில்லன்

By Siva

சென்னை: வலிக்காமல் கையை பிடிக்க, கட்டிப்பிடிக்க ரம்யா நம்பீசன் கற்றுக் கொடுத்ததாக நடிகர் சித்தார்த்தா சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்த்ராஜ், சித்தார்த்தா சங்கர் உள்ளிட்டோர் நடித்த சத்யா படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது.

படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்நிலையில் படத்தின் வில்லன் சித்தார்த்தா கூறியிருப்பதாவது,

டாக்டர்

டாக்டர்

அப்பா வோலூர்காரர், அம்மா மலேசியாவை சேர்ந்தவர். நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்தேன். அங்கு மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு நடிப்பு மீது தான் அதிக கவனம்.

நடிப்பு

நடிப்பு

படிப்பு தான் முக்கியம் என்று அம்மா சொல்லிவிட்டார். ஆனாலும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு நடிக்க வந்துவிட்டேன். சென்னை வந்து நாசரிடம் நடிக்க கற்றுக் கொண்டேன்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

நான் செல்லும் ஜிம்முக்கு தான் விஜய் ஆண்டனியும் வருவார். அவரிடம் வாய்ப்பு கேட்டபோது சைத்தான் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். ஐங்கரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சத்யா பட வாய்ப்பு கிடைத்தது.

சிபி

சிபி

சிபிராஜுக்கு என் நடிப்பு பிடித்து என்னை ஓகே செய்தார். வில்லன் என்றாலும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்னுடையது. ரம்யா நம்பீசனுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வெட்கமாக இருந்தது.

சித்தார்த்தா

சித்தார்த்தா

கட்டிப்பிடிக்க, வலிக்காமல் கையை பிடிக்க ரம்யா நம்பீசன் தான் எனக்கு கற்றுக் கொடுத்தார். எனக்கு கதாபாத்திரம் முக்கியம் அல்ல நடிப்பு தான். ஹீரோவை விட வில்லனாக நடித்தால் ரசிகர்களின் கவனத்தை பெற முடியும். ரகுவரன் போன்று கம்பீரமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் சித்தார்த்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X