அந்த படத்தை மிஸ் பண்ணதுக்கு ரொம்ப வருத்தப்பட்டேன்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் அதே நிலையில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார்

தமிழை தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிகிறது

தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி பிரபல சூப்பர் ஹிட் காதல் படத்தை மிஸ் செய்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.

திரைத்துறையில் தனித்துவமான நடிகராக

திரைத்துறையில் தனித்துவமான நடிகராக

நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன், குணச்சித்திர வேடங்கள் சிறப்புத் தோற்றங்கள் என அனைத்திலும் நடித்து வரும் விஜய் சேதுபதி திரைத்துறையில் தனித்துவமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.

வில்லனாக நடிக்கும் படங்களுக்கு டிமாண்ட்

வில்லனாக நடிக்கும் படங்களுக்கு டிமாண்ட்

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிகிறது. குறிப்பாக விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் திரைப்படங்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருப்பதால் பல முன்னணி நடிகர்களும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்கி வரும் திரைப்படம் விக்ரம்

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக

மாஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து கலக்கி இருந்தனர் இந்த படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் இரக்கமற்ற வில்லனாக மிரட்டியிருப்பார். பவானி கதாபாத்திரத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி அடுத்ததாக தெலுங்கில் நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்தில் நடித்த உப்பன்னா மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது இந்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

Recommended Video

Beast Movie Review | பீஸ்ட் விமர்சனம் | Yessa ? Bussa ? | Vijay | Pooja | Nelson | Filmibeat Tamil
அந்த படத்தை மிஸ் பண்ணதுக்கு

அந்த படத்தை மிஸ் பண்ணதுக்கு

இவ்வாறு பெரும்பாலும் வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டும் விஜய் சேதுபதி கைதி மற்றும் இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தில் நடிக்க இருந்து அந்த வாய்ப்பு சில காரணங்களால் நழுவி போனது குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளார். மேலும் கைதி படத்தில் கார்த்தி தன்னை விட மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது மிகவும் அருமையான காதல் கதை அந்த படத்தை மிஸ் பண்ணதுக்கு இப்பவும் வருத்தப்படுகிறேன் என விஜய்சேதுபதி பேசியுள்ளார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X