கடவுளுக்கே இந்த நிலைமையா?.. ஐசியூவில் ஜக்கி வாசுதேவ்.. உலகமே நின்று போனதாக கங்கனா ரனாவத் ட்வீட்!

மும்பை: ஈஷா யோகா மையத்தை நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சத்குருவுக்கு இப்படி ஆகிவிட்டதே என்பதை அறிந்த நடிகை கங்கனா ரனாவத் கடவுளுக்கே இந்த நிலைமையா? என பதிவிட்டுள்ள ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் தீவிர சிவபக்தை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தமிழ்நாட்டில் தலைவி படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது அவர் ராமேஸ்வரம் மற்றும் ஈஷா யோகா மையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சிவ வழிபாடு செய்து வந்தார்.

I felt God has collapsed - Kangana Ranaut tweeted over Jaggi Vasudev hospitalized

சத்குருவுடன் நல்ல நட்பு: சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் உடன் நடிகை கங்கனா ரனாவத்துக்கு நல்ல நட்பு இருந்து வந்தது. தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால், அமலாபால் போன்ற பல நடிகைகள் சத்குருவின் சிஷ்யைகளாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கூட நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் தமன்னா கலந்து கொண்டனர்.

மூளையில் ரத்த கசிவு: ஆன்மீக குருவாக திகழ்ந்து வந்த ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் திடீரென்று ரத்த கசிவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து அவசர சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருடன் தொடர்பு கொண்டு பேசி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர்.

கடவுளுக்கே இந்த நிலைமையா: பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், "முதலில் இந்த செய்தியை கேட்டதும் தான் நம்பவில்லை என்றும் அதன் பின்னர் கடவுளுக்கே இந்த நிலைமையா என அதிர்ச்சி அடைந்தேன், ஐசியூவில் சத்குரு இருப்பதை பார்த்த பின்னர் தான் அவருக்கும் நம்மைப்போல எலும்பு, ரத்தம் மற்றும் சதை இருக்கும் என்பதே உணர்ந்து கொண்டேன். அதுவரை அவருடன் பழகிய வரையில் அவரை கடவுளாகவே பார்த்து வந்தேன்.. சத்குருவுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதை அறிந்து என் தலையை சுற்றி விட்டது. பூமியே ஒரு நிமிடம் இடம் மாறியது போல தோன்றியது. அவர் நலமுடன் குணமாகி வருவார் அல்லது சூரியனே உதிக்காது" என கங்கனா ரனாவத் உருக்கமாக ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைந்து வருவார் என்கிற முழு நம்பிக்கையுடன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.

I felt God has collapsed - Kangana Ranaut tweeted over Jaggi Vasudev hospitalized

பக்தர்கள் பிரார்த்தனை: ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைந்து பழையபடி தனது ஆன்மிக பணிகளை செய்ய வேண்டும் என சினிமா பிரபலங்கள் தொடங்கி பக்தர்கள் வரை பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகை கங்கனா ரனாவத் போட்ட இப்படியொரு ட்வீட்டுக்கு ஆதரவும் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன. சரியான டிராமா குயின் கங்கனா ரனாவத் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

நலமாக உள்ளார்: அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து தற்போது ஜக்கி வாசுதேவ் நலமுடன் உள்ளார் என்றும் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தனது ஆன்மிக பணிகளை ஆரம்பிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X