ரொம்ப குண்டாகி எனக்கே என்னை பார்த்து பயமாக இருந்தது: தங்கச்சி நடிகை
மும்பை: தன் புகைப்படத்தை பார்த்து பயந்ததாக நடிகை பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ராவும் அக்கா வழியில் நடிகையாகிவிட்டார். நடிக்க வந்தபோது பூசினாற் போன்று இருந்த அவர் பின்னர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பரினீத்தி படங்கள், உடல் எடை பற்றி பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது,
வெயிட் போட்டு ரொம்ப குண்டாகிவிட்டேன். நான் குண்டாக இருப்பதை பார்த்து எனக்கே என் மீது வெறுப்பு ஏற்பட்டது. ஒரு நாள் என் புகைப்படத்தை பார்த்து நானே பயந்துவிட்டேன். எனக்கே என்னை அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகிவிட்டேன். ஒரு நடிகையாக இருந்து கொண்டு இப்படி குண்டாக இருப்பது சரியில்லை என்று முடிவு செய்தேன்.
அந்த நேரத்தில் என் படம் வேறு ஃபிளாப் ஆனது. அதன் பிறகு பிரேக் எடுக்க இது தான் சரியான நேரம் என்று முடிவு செய்தேன். ஆறு மாதங்களுக்கு எந்த ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானித்தேன். கடுமையாக ஒர்க்அவுட் செய்தேன். என் உடல் எடையை வெகுவாக குறைத்தேன் என்றார்.
2014ம் ஆண்டு கில் தில் படம் வெளியான பிறகு பரினீத்தி இரண்டு ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பரினீத்தி சோப்ரா சித்தார்த் மல்ஹோத்ராவுடன் சேர்ந்து நடித்துள்ள ஜபரியா ஜோடி படம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படத்தை பிரசாந்த் சிங் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











