“கொடூரமான தண்டனையை கொடுத்து விட்டேன்.. ப்ளீஸ் என்னைக் கொன்று விடுங்கள்”.. கதறும் ஸ்ரீ ரெட்டி!

அன்னையர் தினத்தையொட்டி மிக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி

Recommended Video

Actress Sri reddy: அன்னையர் தினத்தையொட்டி நடிகை ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவு

சென்னை: அன்னையர் தினத்தையொட்டி நடிகை ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டோலிவுட்டிலும், கோலிவுட்டிலும் பலரை கதிகலங்க வைத்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவரது பாலியல் குற்றச்சாட்டுகள், பல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை பீதியடைய வைத்தது.

ஸ்ரீ ரெட்டி தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவர் சென்னையில் குடியேறி இருக்கிறார்.

உருக்கமான பதிவு:

உருக்கமான பதிவு:

இந்நிலையில், அன்னையர் தினத்தையொட்டி உருக்கமான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனது தாய்க்கு மிகக் கொடூரமான தண்டனையை கொடுத்துவிட்டதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஐ லவ் யூ அம்மா:

பேஸ்புக் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, "அம்மாவை தவிர நம்மை வேறு யாரால் பார்த்துக்கொள்ள முடியும். ஐ லவ் யூ அம்மா. நீங்களும் என்னை இன்னும் நேசிக்கிறீர்கள்.

நீங்கள் செய்த தவறு:

நீங்கள் செய்த தவறு:

என்னுடை பிறப்பை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். என்னை போன்ற ஒரு பெண்ணுக்கு வேறு எந்த தாயும் பிறப்பு கொடுத்திருக்க மாட்டாள். என்னை பெற்றது தான் நீங்கள் செய்த தவறு. அதற்காக மிகக்கொடூரமான தண்டனையை நான் உங்களுக்கு கொடுத்துவிட்டேன்.

நடைபிணம்:

நடைபிணம்:

எனக்கு தெரியும் நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நான் உங்களுக்கு நிறைய கஷ்டங்களை கொடுத்துவிட்டேன். நிறைய பேர் உங்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். நீங்கள் நடைப்பிணமாக தான் வாழ்ந்து வருகிறீர்கள்.

கடவுளின் பிரார்த்தனை:

கடவுளின் பிரார்த்தனை:

இப்பவும் நீங்கள் எனக்காக கடவுளிடம் பிராத்தனை செய்கிறீர்கள். எதற்காக அம்மா?. நான் செய்த தவறுக்காக உங்களை ஏன் எல்லோரும் தினமும் குறை சொல்லுகிறார்கள். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அம்மா.

எனது ஆசை:

எனது ஆசை:

நீங்கள் கொடுத்த உடம்பு தான் இது. நீங்களே எனது உயிரை எடுத்துவிடுங்கள். நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா". இவ்வாறு ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X