இந்த காத்திருப்புக்காக எல்லாவற்றையும் கொடுத்தேன்... ரீஎன்ட்ரி குறித்து பிரபல நடிகை!
சென்னை: தன்னுடைய வேலைக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், 1994 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு தஸ்தக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிய அவர், தமிழில் நடிகர் நாகார்ஜூனாவுடன் ரட்சகன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

கடைசி படம்
பின்னர் ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வந்த அவர், சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.2010ஆம் ஆண்டு வெளியான நோ பிராப்ளம் படம்தான் பாலிவுட்டில் அவரது நடிப்பில் வெளியான கடைசி படம் ஆகும்.

19ஆம் தேதி ரிலீஸ்
தற்போது 44 வயதான சுஷ்மிதா சென் ஆர்யா என்ற வெப்சீரிஸ் மூலம் மீண்டும் கம்பேக் ஆகியிருக்கிறார். இந்த வெப் சீரிஸின் ட்ரெயிலர் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இந்த ட்ரெயிலர் ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூன் 19ம் தேதி ரிலீசாகவுள்ள இந்த வெப்சீரிஸில் தனது குடும்பத்துக்காக எதையும் செய்ய துணியும் பெண்ணாக நடித்துள்ளார்.

எல்லாவற்றையும் கொடுத்தேன்
இந்நிலையில் தனது ரீஎன்ட்ரி குறித்து நடிகை சுஷ்மிதா சென், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் "கடவுளின் கிருபையால், எனக்கு மிகவும் நம்பமுடியாத அழகான கதை, ஒரு அருமையான தளம், ஹாட்ஸ்டார் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை, இவை எல்லாமும் எனக்கு ஒன்றாக கிடைத்திருக்கிறது.

பெருமையுடன் சொல்ல முடியும்
இதற்கு காரணம் என்னவென்றால், நான் அதற்கு நேரம் கொடுத்தேன், அந்த காத்திருப்புக்காக எல்லாவற்றையும் கொடுத்தேன். நான் வீட்டில் உட்கார்ந்து கொள்வேன் என்று சொன்னேன் ஆனால் நான் ஏதாவது செய்யும்போது அது மதிப்புக்குரியதாக இருக்க வேண்டும். இப்போது நான் அதை பெருமையுடன் சொல்ல முடியும், " இவ்வாறு நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











