twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'திரையில அப்படி பண்ணணுங்கறது என் பொறுப்பல்ல.. ஆனா, அதை நோக்கிதான் பயணிக்கிறேன்.. வித்யா பாலன்!

    By
    |

    மும்பை: வலிமையான பெண்களை திரையில் காட்ட வேண்டும் என்பது என் பொறுப்பல்ல என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளர்.

    Recommended Video

    BALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது? | FilmiBeatTamil

    பிரபல இந்தி நடிகை வித்யா பாலன். சஞ்சய் தத், சைஃப் அலிகான், நடித்த பரினீதா படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர்.

    சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான, டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு, பரினீதா, பா, மிஷன்மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார்.

    உண்மைய சொல்லணும்னா.. சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ்.. வெட்கமே இல்லாமல் ஒத்துக் கொண்ட ஷிவானி!உண்மைய சொல்லணும்னா.. சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ்.. வெட்கமே இல்லாமல் ஒத்துக் கொண்ட ஷிவானி!

    தமிழில் நிராகரிப்பு

    தமிழில் நிராகரிப்பு

    ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்த அவர், ஒரு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டார். இதனால், தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை வித்யா பாலன், மலையாளப் படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில், என்.டி.ஆர்.பயோபிக்கில், பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்தார்.

    நேர்கொண்ட பார்வை

    நேர்கொண்ட பார்வை

    பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில், அஜித் ஜோடியாக, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கைக் கதையில், கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது. இப்போது ஷெர்னி உட்பட சில படங்களில் நடித்துவருகிறார்

    முகத்தை மாற்றியவர்

    முகத்தை மாற்றியவர்

    பாலிவுட்டில், தான் நடிக்கும் படங்களின் மூலம் பெண்களுக்கான முகத்தை மாற்றியவர் என்கிறார்கள், இவரை. இதுபற்றி அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வலிமையான பெண்களைத் திரையில் காட்ட வேண்டும் என்பது என் பொறுப்பல்ல. அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால் நான் அதை நோக்கிதான் செல்கிறேன்.

    ஊக்கம் பெறுகிறேன்

    ஊக்கம் பெறுகிறேன்

    ஏனென்றால், அதுபோன்ற பெண்களின் கதைகளால் நான் ஈர்க்கப்படுகிறேன். அது போன்ற பெண்களாலேயே நானும் ஊக்கம் பெறுகிறேன். அதனால் அதுபோன்ற கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். என்னை தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்ளும் எந்த கேரக்டரிலும் நடிப்பேன்.

    பாலின சமத்துவம்

    பாலின சமத்துவம்

    நான் இப்போது நடித்துள்ள நட்கத் என்ற குறும்படம் கூட ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தாய் தனது இளம் மகனுக்கு பாலின சமத்துவம் பற்றிச் சொல்லும் கதையை கொண்டது இது. இவ்வாறு வித்யா பாலன் கூறியுள்ளார்.

    English summary
    Actress Vidya Balan says, she has got inspired by strong women stories
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X