twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐ படத்துக்கு யுஏ... ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது!

    By Shankar
    |

    ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்துக்கு யு ஏ சான்றிதழ் தணிக்கை குழுவினர் கொடுத்துள்ளனர்.

    இதனால் படத்துக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்பதால், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

    விக்ரம் - எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐ படம் வரும் ஜனவரி 9-ம் தேதியன்று வெளியாகிறது. படத்தின் ட்ரைலர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

    இந்த நிலையில் படத்தை நேற்று சென்னை மண்டல தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தைப் பார்த்த குழுவினர் படத்துக்கு யு ஏ சான்று அளித்துள்ளனர். படத்தில் வன்முறை மற்றும் கோரமான காட்சிகள் உள்ளதால் இப்படி சான்றளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    I gets UA, going to revising committee

    தமிழக அரசு விதிப்படி யுஏ சான்று பெற்ற படங்களுக்கு வரி விலக்கு தரப்பட மாட்டாது. எனவே, படத்தை ரிவைசிங் கமிட்டிக்குக் கொண்டு போய், யு சான்று பெற தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

    English summary
    The censor process of Vikram’s Shankar directed I has happened yesterday and according to the reports the censors in Chennai have given a U/A certificate to the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X