twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் 58% தான்.. மார்க் எல்லாம் வெறும் நம்பர் தான்.. மாணவர்களுக்கு ஊக்கமளித்த மாதவன்!

    |

    சென்னை: மாணவர்களின் தேர்ச்சி அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் மாதவன் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஒரு போஸ்ட்டை போட்டுள்ளார்.

    Recommended Video

    Nayanthara joins Katrina Kaif | Kay By Katrina | Kay Beauty

    சீரியல் நடிகராக இருந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த நடிகர் பட்டியலில் மாதவன் பெயரும் இருக்கும்.

    இளைஞர்களுக்கு எப்போதுமே இன்ஸ்பிரேஷனாக இருந்து வரும் இவர், போர்டு எக்ஸாம் ரிசல்ட்டுகளால் மாணவர்கள் மனம் உடைந்து போக வேண்டாம் என்பதற்காக தன்னுடைய மதிப்பெண் சதவீதத்தை அறிவித்து இருக்கிறார்.

    இந்துத்துவத்தை இழிவுபடுத்துபவர்கள் அதற்கான ஆபத்தை சந்திப்பீர்கள்.. எச்சரிக்கும் பிரபலங்கள்! இந்துத்துவத்தை இழிவுபடுத்துபவர்கள் அதற்கான ஆபத்தை சந்திப்பீர்கள்.. எச்சரிக்கும் பிரபலங்கள்!

    நான் 58% தான்

    நான் 58% தான்

    பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், நடிகர் மாதவன், தனது டிவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். "தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள், குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் யாரும் துவண்டு போக வேண்டாம்.. நான் வெறும் 58 சதவீத மதிப்பெண் தான் என்னுடைய போர்ட் எக்ஸாம்ல எடுத்தேன்.. வாழ்க்கை இங்கேயே முடிந்து போகல, இது தான் ஆரம்பமே, இன்னும் நிறைய விளையாட்டு இருக்கு" என தனது ஸ்டைலில் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்துள்ளார்.

    மார்க் வெறும் நம்பர்ஸ் தான்

    மார்க் வெறும் நம்பர்ஸ் தான்

    மாதவனின் பதிவை பார்த்த அவரது ரசிகர்கள், அவரது நல்ல முயற்சியை பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இளைஞர்கள் பலரும், மார்க்ஸ் வெறும் நம்பர் மட்டும் தான் என்றும், திறமைகள் தான் ரொம்ப முக்கியம், மாணவர்கள் தங்கள் தனித் திறமையை கண்டறிந்து அதனை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

    3 இடியட்ஸ்

    3 இடியட்ஸ்

    'சீ ஹாக்ஸ்' உள்ளிட்ட டிவி தொடர்களில் நடித்து, ஹீரோவாக உருவாகி உள்ள மாதவன், பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கானுடன் இணைந்து நடித்த 3 இடியட்ஸ் படத்தில், போட்டோகிராஃபராக வேண்டும் என ஆசைப்பட்டாலும், வீட்டில் பெற்றோர்கள் ஆசைக்காக இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 3 இடியட்ஸ் படத்திலும், மாணவர்களின் மூளை பிரெஷர் குக்கர் அல்ல என்பதை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தெளிவாக விளக்கி இருப்பார்.

    மூன்று படங்கள்

    மூன்று படங்கள்

    நிசப்தம், ராக்கெட்டரி, மாறா என மூன்று படங்கள் நடிகர் மாதவன் கைவசம் தற்போது இருக்கின்றன. அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள நிசப்தம் படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக மாதவன் நடித்துள்ளார். ராக்கெட்டரி படத்தை முதன்முதலாக இயக்கி வருகிறார். மேலும், மலையாளத்தில் துல்கர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான சார்லி படத்தின் ரீமேக்கான மாறா படத்திலும் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்.

    English summary
    R Madhavan congratulated the students who exceeded their expectations and passed with flying colours. He also went on to reveal his own marks when he was a student and urged everyone to not feel disheartened.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X