எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தது சசிகுமார் தான்... நட்புக்கு இலக்கணமாக திகழும் சமுத்திரக்கனி!
சென்னை: தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணம் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சசிகுமாரும் சமுத்திரக்கனியும் தான்
படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்
தமிழ் சினிமாவையும் கடந்து தெலுங்கு திரைத்துறையிலும் மிக முக்கிய நடிகராக உயர்ந்திருக்கும் சமுத்திரக்கனிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது சசிகுமார் தான் பெருமை படுத்தியுள்ளார்.

நெகட்டிவ் ரோலில்
சின்னத்திரையில் பணியாற்றிக்கொண்டிருந்த சமுத்திரக்கனி இப்பொழுது நடிகராக வெள்ளித்திரையில் பட்டையை கிளப்பி கொண்டுள்ளார். சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான சமுத்திரக்கனி இப்பொழுது தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு திரைப்பட உலகிலும் மிக முக்கியமான நடிகராக உயர்ந்துள்ளார்.

சமுத்திரக்கனி சசிகுமார் கூட்டணியில்
நண்பர்களைப் பற்றி எத்தனை படங்கள் வெளி வந்திருந்தாலும் சமுத்திரக்கனி சசிகுமார் கூட்டணியில் வெளியான நாடோடிகள் படத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் இயக்கத்தில் சமுத்திரகனி நடித்தார் பின் நாடோடிகள் படத்தில் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.

நிஜ நண்பர்களாக
திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நண்பர்களாக இருந்து வரும் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் கடைசியாக உடன்பிறப்பே என்ற படத்தில் இணைந்து நடித்து இருப்பார்கள். இந்த நிலையில் இயக்குனராக ஆசைப்பட்ட சமுத்திரக்கனி எவ்வாறு நடிகராக மாறினார் என்ற சுவாரஸ்ய தகவல் பகிர்ந்துள்ளார்.

மெகா சீரியல்களை இயக்கினார்
உதவி இயக்குனராக சில படங்களில் பணியாற்றிவிட்டு சின்னத்திரையில் மூன்று பெரிய சேனல்களில் அடுத்தடுத்து மெகா சீரியல்களை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தார் சமுத்திரக்கனி அப்பொழுது இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படத்தில் சசிகுமார் இணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது சமுத்திரக்கனிக்கும் சசிகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் பருத்திவீரன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

சசிகுமார் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார்
அப்பொழுது இருவருக்குமான நட்பு மிகவும் நெருக்கமானது இந்த நிலையில்தான் சசிகுமார் ஒரு நாள் சமுத்திரகனியை தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் ஒரு படம் இயக்கப் போகிறேன் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அப்போது அடுத்தடுத்து மூன்று மெகா சீரியல்களை இயக்கிக் கொண்டிருந்த சமுத்திரக்கனி போலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இதுதான் சரியான நேரம் இதற்குத்தானே வந்தோம் என இயக்கிக் கொண்டிருந்த மூன்று சீரியல்களையும் விட்டுவிட்டு சசிகுமார் இயக்கத்தில் சுப்பிரமணியபுரம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அவ்வாறு நடிகராக திரை வாழ்க்கையைத் தொடங்கிய சமுத்திரக்கனி இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகராகவும் இயக்குனராகவும் உயர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











