திருமணமானவருடன் தவறான உறவு வைத்திருந்தேன்.. உடலளவில் காயப்படுத்தினார்.. நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!
Recommended Video
சென்னை: திருமணமானவருடன் தவறான உறவு வைத்திருந்ததாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
கண்டநாள் முதல் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சிறந்த பாடகியான ஆண்ட்ரியா கடைசியாக விஸ்வரூபம் 2 மற்றும் வட சென்னை படங்களில் நடித்தார். அதற்கு பின் எந்த படத்திலும் அவர் கமிட்டாகமால் இருந்தார்.

ஆயுர்வேத சிகிச்சை
இந்நிலையில் தான் தனக்கு இருந்த மன அழுத்தம், உடல் மற்றும் மனரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் சில காலம் நடிப்பில் இருந்து விலகியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

கவிதைப் போட்டி
ஆனால் மாதக்கணக்காய் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் அளவுக்கு என்ன மன அழுத்தம் என்று ஆண்ட்ரியா தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கேற்றுள்ளார் ஆண்ட்ரியா.

முழுவதும் சோகம்
அப்போது முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சோகமான கவிதைகளை வாசித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. முழுக்க முழுக்க சோகமே நிரம்பியிருந்ததாம் அந்த கவிதைத் தொகுப்பில்.

தவறான உறவு
அதனைக்கேட்ட பார்வையாளர்கள் ஏன் இவ்வளவு சோகம் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, திருமணமான ஒரு நபருடன் நான் தவறான உறவு வைத்திருந்தேன்.

உடலளவில் காயம்
அந்த நபர் என்னை உடலளவில் மிகவும் காயப்படுத்தினார். நான் செய்த தவறால் என் வாழ்க்கையே இருண்டு போய்விட்டது. உடலாளும் மனதாலும் காயப்பட்டிருந்த நான் அந்த துயரத்தில் அடக்க முடியாமல் எழுதிய கவிதைகள் தான் இவை எஎன உருக்கமாக தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

காரணம் இதுதான்
ஆக ஆண்ட்ரியா மாதக் கணக்காய் மன அழுத்தத்திற்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றதன் காரணம் இதுதான் என தெரியவந்துள்ளது. தற்போது புதிய மனுஷியாய் எழுந்து வந்திருப்பதாகவும் கூறினார் ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











