வெற்றிமாறன்னு பெயர் வைக்கவே பயந்தேன்.. எதுக்குடா இந்த பெயரை வெச்சாங்கன்னு ஃபீல் பண்றேன்!

சென்னை : இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார்

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தரமான படங்களை தயாரித்து வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்

இந்த நிலையில் வெற்றி மாறன் என்ற பெயரை சினிமாவில் பயன்படுத்துவதற்காக ஆரம்பத்தில் பயந்ததாகவும் எதனால் என்ற காரணத்தையும் வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார்

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக

தனது ஒவ்வொரு படத்திலும் வெற்றி முத்திரையை பதித்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வரிசையாக வெற்றி பெற்று வருகிறது. பொல்லாதவன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் முதல் படம் பொல்லாதவன் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது பொல்லாதவன் வெற்றியை தொடர்ந்து இன்று வரை நடிகர் தனுஷுடன் இணைந்து பயணம் செய்து கொண்டுள்ளார்.

நான்காவது முறையாக இணைந்த

நான்காவது முறையாக இணைந்த

அந்த வகையில் வெற்றிமாறன் தனுஷ் காம்போவில் வெளியான திரைப்படங்கள் சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்று வருகிறது.பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னை என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்த அசுரன் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது

நாவல்களைத் தழுவி

நாவல்களைத் தழுவி

அசுரன் வெற்றி ஒட்டுமொத்த திரை உலகையே புரட்டிப் போட்ட நிலையில் நாவல்களை மையப்படுத்தி படங்களை எடுத்து வருகிறார் வெற்றிமாறன். அடுத்தடுத்து இயக்கும் படங்களையும் பிரபல நாவல்களைத் தழுவி எடுத்து வருகிறார். இந்த வகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை வெற்றிமாறன் இப்பொழுது வருகிறார்.

விடுதலை

விடுதலை

இதுவரை தமிழ் சினிமாவில் காமெடியனாக மட்டும் வலம் வந்து கொண்டிருந்த நடிகர் சூரியை ஹீரோவாக விடுதலை என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறார் வெற்றிமாறன். சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

வெற்றிமாறன் பெயரை பயன்படுத்த பயந்தேன்

வெற்றிமாறன் பெயரை பயன்படுத்த பயந்தேன்

இப்பொழுது தமிழ் சினிமாவில் வெற்றி மாறன் என்ற பெயர் அனைவருக்கும் பிடித்த பெயராக இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் பொல்லாதவன் படத்தில் பணியாற்றும்போது வெற்றிமாறன் என்ற தனது இயர்பெயரை பயன்படுத்த மிகவும் தயங்கியதாகவும் அப்படியே பெயர் வைத்தால் மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள் என அப்பொழுது நினைத்து வெற்றிமாறன் என்ற பெயரை பயன்படுத்த பயந்தேன் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X